Monday, March 3, 2014

CONVENTION ORGANISED JOINTLY BY KOVILPATTI, TENKASI, SANKARANKOIL P3,P4, GDS BRANCHES

கோவில்பட்டி, தென்காசி மற்றும் சங்கரன்கோயில்  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, GDS கிளைகளின் சார்பாக  நேற்று (02.03.2014) ஒய்வு பெற்ற மூத்த தோழர்களுக்கு பாராட்டு விழாவும்  தொழிற்சங்க கருத்தரங்கமும் ஒரு சேர சிறப்பாக நடத்தப் பட்டது.  நிகழ்ச்சி துவக்கத்தில்  'கரிசல் குயில்' . கிருஷ்ணசாமி அவர்களின்  தொழிற்சங்கப் பாடல் நிகழ்ச்சி  சிறப்பாக அமைந்தது. 


அரசுப் பணி நிறைவு செய்த மூத்த தோழர்கள் , 

கோவில்பட்டி கோட்டத்தின் முன்னாள் செயலரும், தென்காசி கிளையின் முன்னாள் செயலருமான தோழர்.G. சுப்பையா அவர்களும் 

அம்பை கிளையின் முன்னாள் செயலரும் , தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநில உதவிச் செயலருமான 
தோழர் . S. தியாகராஜனும்,  

அவர்களது  நீண்ட தொழிற்சங்க சேவையை நினைவு கூர்ந்து அனைவராலும் சிறப்பாக பாராட்டப் பட்டனர்.  நிகழ்ச்சிகளுக்கு அஞ்சல் மூன்று கோட்டத் தலைவர் தோழர். H.சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்க,  அஞ்சல் நான்கு மாநிலத் தலைவர் தோழர்  G. கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்ற,  GDS சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். S. ராமராஜ் அவர்கள்  துவக்கவுரை  நிகழ்த்தினார்.

பாராட்டு விழா மற்றும்  தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் , மாநிலச் செயலர் தோழர்.  J.R., மண்டலச் செயலர்  தோழர்.S, தியாகராஜபாண்டியன் , மாநில உதவிச் செயலர் தோழர்.S.K. ஜேக்கப் ராஜ் , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர்.  S. தமிழ்செல்வன்  உள்ளிட்ட   தலைவர்களும்  தென் மண்டலத்தின்  பல கோட்ட/ கிளைகளில் இருந்து அஞ்சல் மூன்று  , அஞ்சல் நான்கு , GDS கோட்ட/ கிளைச் செயலர் களும்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  குறிப்பாக  கன்னியாகுமரி, தூத்துக்குடி விருதுநகர், நெல்லை, அம்பை, சிவகாசி , பழனி கிளைகளில் இருந்து அதன் பொறுப்பாளர்களும் முன்னணித் தோழர்களும் கலந்துகொண்டது கூட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது . கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட மிகப் பெரிய விழாவாக இந்த  நிகழ்ச்சி அமைந்தது  பாராட்டத்தக்கதாகும்.

தொடர்ந்து  நடைபெற்ற தொழிற்சங்க கருத்தரங்கு நிகழ்ச்சியில்  மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ் அவர்கள் POWER POINT முறையில்  "அஞ்சல் தொழிற்சங்க வரலாறு"  என்ற தலைப்பில் மிகச் சிறப்பான முறையில் வகுப்பு எடுத்தார்.  தொடர்ந்து  மாநிலச் செயலர் தோழர்.J.R.  அவர்கள்  "7 ஆவது ஊதியக் குழு, GDS ஊழியர்கள் நிலை,  அஞ்சல் துறையின் இன்றைய நிலை- அதில் தொழிற்சங்கப் பார்வை " என்ற தலைப்பின்  மிக விரிவான முறையில் வகுப்பினை எடுத்தார்.  300 க்கும் மேற்பட்ட , தோழிய, தோழர்கள்  இறுதி வரை கலையாமல்  இருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும்  பங்கு கொண்ட விதம்  நிச்சயம்  தென் மணடலத்தில்  உள்ள தொழிற் சங்க விழிப்புணர்ச்சியை  வந்திருந்த  தலைவர்களுக்கு எடுத்துக் காட்டியது.  இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த கோவில்பட்டி,  தென்காசி, சங்கரன்கோயில்  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS நிர்வாகிகளுக்கு  , தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !

நிகச்சியில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள்  கீழே பார்க்கவும்