Saturday, March 29, 2014

DEPARTMENT'S REPLY TO OUR GENL. SECRETARY ON AGE RELAXATION FOR WIDOWS, DIVORCED WOMEN IN EXAMS

DOPT உத்திரவுப்படி கணவனை இழந்த , விவாகரத்து செய்யப் பட்ட , சட்ட பூர்வமாக கணவனைப் பிரிந்து வாழும் , மறுமணமாகாத பெண்களுக்கு,  மத்திய அரசு  வேலை வாய்ப்பில் , அவர்களுக்கு மறு வாழ்வு கொடுக்கும் நோக்கத்தில் , தேர்வுக்கு அனுமதிக்கப்படும் வயது வரம்பில்  தளர்வு என்பது அளிக்கப்பட வேண்டும்  (35  வயது O C  மற்றும் 40 வயது, SC /ST ) என்று உள்ளதை , நமது இலாக்காவில் எழுத்தர் தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப் படவில்லை  என்றும்  அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றும் நமது பொதுச் செயலாளர் , இலாக்கா முதல்வருக்கு கடிதம்  அளித்தது நமது வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரிக்கப் பட்டிருந்தது. தற்போது  நமது இலாக்காவில் இருந்து அதற்கு பதில் அனுப்பியுள்ளார்கள் . அதன் நகல் கீழே பிரசுரிக்கப் பட்டுள்ளது . பார்க்கவும்.  

அதாவது , DOPT  இன் சட்ட விதி என்பது STAFF  SELECTION COMMISSION மூலமாகவோ அல்லது  EMPLOYMENT EXCHANGE மூலமாகவோ தேர்வுக்கு செல்பவர்களுக்கு/ தேர்வு பெறுபவர்களுக்கு மட்டும் (?) தானாம் . இது வேறவாம் .  இது தனித் தேர்வாம் . இதுக்கெல்லாம் அந்த சட்ட விதி பொருந்தாதாம் . 

என்னமா யோசிக்கிறாங்க பாருங்க ! 

 நேரடித் தேர்வுக்கு பொருந்தும் என்று  நாம் போராடி உத்திரவு  வாங்கினால் , அதுக்கும் புதுசா  யோசிப்பாய்ங்க போல . இதுல  தபால் இலாக்கான்னு போடல ..அதுனால இதுக்கு பொருந்தாதுன்னு கூட சொல்லுவாய்ங்க. அதிகாரிகள் எங்கேயும்  ஒரே மாதிரியாத்தான் இருப்பாய்ங்க  போல இருக்கு .

  தொழிலாளிகதான்  பிரிஞ்சு பிரிஞ்சு யோசிக்கிறாங்க !  
என்னவோ போங்கப்பா  !