மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வாயிலில் 07.03.2014 அன்று நடைபெற்ற உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டத் தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் கீழே பார்க்கவும்.
மத்திய அரசு ஊழியர்களின் ஏழாவது ஊதியக்குழு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற் றாமல் , தன்னிச்சையாக ஊதியக் குழுவுக்கு TERMS OF REFERENCE ஐ பரிந்துரை செய்த மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்கு (?) கூட்டணி அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மகா சம்மேளனத்தால் அறிவிக்கப் பட்டிருந்தது . மத்திய கூட்டு ஆலோசனை தேசியக் குழுவைக் கூட்டி மீண்டும் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளிடம் விவாத்தித்து TERMS OF REFERENCE மாற்றம் செய்யப் படவேண்டும் என்று கோரப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தோழர். J.R. தலைமை வகித்தார். மகா சம்மேளனத்தின் உதவித் தலைவர் தோழர். K. சங்கரன் வரவேற்புரை ஆற்ற , தொடர்ந்து தமிழக மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் தோழர். M. துரைபாண்டியன் அவர்கள் பிரச்சினைகளை விளக்கிப் பேசினார். அடுத்து NFPE சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர். S. ரகுபதி போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். இறுதியில் தமிழக மகா சம்மேளனப் பொருளாளர் தோழர். சுந்தரமூர்த்தி அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து பகுதி தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் சுமார் 300 க்கும் மேற்பட்ட தோழிய/தோழர்களுக்கும் தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி.