'PREVENTION AND CONTROL OVER FRAUDS' ங்கற தலைப்பில நாம படிச்ச விஷயங்கள்லாம் இப்ப தேவையில்ல போலருக்கு . அதெல்லாம் சின்ன வயசுல படிச்சது !
யாருக்கு வேணுன்னாலும் PASS BOOK கொடுக்காமலேயே கணக்கு OPEN பண்ணலாமாம். அப்படியே HEAVY AMOUNT அடிக்கறவன் அடிச்சாலும் , இருக்கவே இருக்கானுங்க , POST OFFICE கிளார்க் ஏமாளிங்க ..
சும்மா விடுவோமா CONTRIBUTORY NEGLIGENCE FACTOR ல அவனுவள தாளிச்சுட மாட்டோம் !
PASS BOOK இல்லாத சேமிப்பு வங்கி, STAMP இல்லாத POST OFFICE , கழண்டு போன டப்பா கம்ப்யூட்டர் , PRINT அடிக்கவே முடியாத பிரிண்டர், BATTERY இல்லாத UPS, வேலையே செய்யாத GENERATOR, TRANSACTION பண்ணவே முடியாத ATM இப்படி ....இதெல்லாம்தான் நம்மளுதாச்சே !.
இதுக்கெல்லாம் FUND ALLOT ஆகவே ஆகாது.
ஆனா அடிக்கடி கட்டின BUILDING ஐயே லட்சக் கணக்குல
செலவு பண்ணி
, FINANCE MART ன்னும் , PROJECT ARROW ன்னும்
I,T. MODERNIZATION PROJECT ன்னும்,
LOGISTIC ன்னும் , BPC ன்னும் , SPCC ன்னும்
நாமதான் இடிச்சு இடிச்சு இடிச்சு கட்டிகிட்டே இருப்போமே !
===============
விளயாடுங்கையா விளையாடுங்க ! இதுவெல்லாம் மேலதிகாரிகளுக்கு தெரியவே தெரியாது ! சத்தியமா சொல்றோம் ! ஆமா ... தெரியாதுன்னு அடிச்சு சொல்றோம் ...நம்புங்கய்யா ... நம்புங்க ...
"தம்பி .. நீங்க கணக்கு போடுங்க ... நம்ம ஊருலேருந்து பாசக்கார பய புள்ளைங்க வந்திருக்காக ... பணம் அப்பறமா தருவானுங்க .. அவனுங்க பேருலயும் கணக்கு போடுங்க ... நீங்க PASS BOOK தரவே வேணாம்" ...
அட .. நம்ம ஊரு POST OFFICE ல இதுவெல்லாம் சாதாரணமப்பா !