அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !
நம்முடைய மத்திய அஞ்சல் JCA முடிவின் படி, 39 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி மூன்றாவது கட்டமாக தார்ணா போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது தெரிந்ததே . தலைமட்ட சூழ்நிலை மற்றும் மழைக் காலம் காரணமாக தமிழக அஞ்சல் JCA வில் இந்த மூன்றாவது கட்ட போராட்டத்தை முழுமையாக நடத்திட இயலவில்லை .
எனவே 39 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (29.10.2014) மதியம் தமிழக அஞ்சல் துறைத் தலைவர் அலுவலக (O /O CHIEF PMG, TN ) வாயிலில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட NFPE மற்றும் FNPO சங்கங்களின் தமிழக JCA வால் முடிவெடுத்து அறிவிக்கப் பட்டிருக்கிறது.
எனவே அனைத்து பகுதி சங்கங்களைச் சேர்ந்த கோட்ட/ கிளைச சங்க மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் தங்கள் பகுதி ஊழியர்களை பெருமளவில் திரட்டி இந்த உணவு இடைவேளை ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவண்
தமிழக அஞ்சல் JCA , சென்னை 600 002.