இலாக்கா அடிப்படை விதிகளின் படி , ஒரு ஊழியரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருக்கின்ற காரணத்தாலோ (CONTEMPLATION ) அல்லது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தாலோ(CHARGE SHEET ISSUED), அல்லது CENSURE வழங்கப் பட்டிருந்தாலோ அவரை இலாக்கா தேர்வு எழுத தடை செய்திட முடியாது. ஆனால் அடிப்படை விதிகளுக்கு மாறாக தற்போது இலாக்கா உத்திரவுப்படி அந்த ஊழியர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் படுவதில்லை.
இது இலாக்கா அடிப்படை விதிகளுக்கு மாறானது என்பதை சுட்டிக் காட்டி நம்முடைய மாநிலச் சங்கம் கடந்த 16.10.2015 அன்று இந்த பிரச்சினையை நம்முடைய அகில இந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதன் படி நம்முடைய அகில இந்திய சங்கம் இந்தப் பிரச்சினையை இலாக்கா முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பார்க்க கடிதத்தின் நகலை. மேலும் இந்த பிரச்சினையையும் JCM DC கூட்டத்தில் எடுக்குமாறு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் நமது பொதுச் செயலரை வேண்டியுள்ளது.