நேரடி எழுத்தருக்கான கல்வித் தகுதித் தேர்வில் LOCAL LANGUAGE அத்தியாவசியம் என்பது PA RECRUITMENT RULES இலிருந்து நீக்கப்பட்டதால், எழுத்தருக்கான கடந்த நேரடி தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த LOCAL LANGUAGE மற்றும் இணைப்பு மொழியான ஆங்கிலம் கூட தெரியாத நிறைய தோழர்கள் பணி நியமனம் பெற்று, மொழி தெரியாத காரணத்தால் அவர்களால் எந்தப் பணியும் செய்ய இயலாத சூழல் உருவானது .
இந்தப் பிரச்சினையில், RECRUITMENT RULE இல் மாற்றம் வேண்டி கடந்த 16.10.2015 அன்று தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தால் நமது அகில இந்திய சங்கத்திற்கு பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. நமது அகில இந்திய சங்கம் தற்போது இந்தப் பிரச்சினையை இலாக்கா முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது. கீழே பார்க்க கடித நகலை . மேலும் இந்த பிரச்சினையை JCM DC கூட்டத்தில் எடுக்குமாறு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் நமது பொதுச் செயலரை வேண்டியுள்ளது.