Tuesday, January 5, 2016

HISTORIC SUCCESS ON TAMILNADU CIRCLE UNION EFFORTS TO ALLOW THE OFFICIALS FOR EXAMINATION WHO ARE AWARDED WITH PENALTY / CONTEMPLATION OF DISC. PROCEEDINGS ETC.

சும்மா  வருவதல்ல சுதந்திரம் !
வழி  காட்டும்  தமிழக  அஞ்சல் மூன்று சங்கம் !

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! 

தமிழக  அஞ்சல் மூன்று சங்கம், ஏற்கனவே பல முக்கியமான அகில இந்திய அளவில் தீர்க்கப் படாத பிரச்சினைகளை , மேல்மட்ட  அமைப்பு கள் மூலம் எடுத்துச் சென்றுள்ளதை  அகில இந்திய மற்றும் சம்மேளன கடிதங்கள் மூலம் நாம் தமிழக அஞ்சல் மூன்று சங்க  வலைத்தளத்தில் பிரசுரித்துள்ளோம். மேலும் ஈமெயில்  மூலம் மாநிலச் சங்க நிர்வாகிகள்/ கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு அதன் நகல்களை அனுப்பியும் வருகிறோம். 

அதில் ஒரு பிரச்சினை, ஏற்கனவே தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தினால் மாநில அளவில் தஞ்சை கோட்ட தோழர். S . சௌந்தரராஜன் அவர்களுக் காக எடுக்கப்பட்டு அதில்  இலாக்காவின்  நிலை மாறுபாடாக இருந்த காரணத்தினால் , நீதி மன்றம் சென்று அதன் மூலம்  வெற்றி பெற்று இன்று அந்தத் தோழர்  ASST .ACCOUNTS  OFFICER ஆக பெங்களூருவில் பணியாற்றி வருகிறார் என்பதுதாகும். இது  பெரும்பகுதி மத்திய மண்டலத் தோழர் களுக்கு  தெரியும். அப்போது அந்தப் பிரச்சினை குறித்து நாம் எழுதிய கடித  நகலை உங்கள் பார்வைக்கு கீழே  வைக்கிறோம்.இதே நிலை விருத்தாசலம் கோட்டத்தை சேர்ந்த தோழர் . M . கணேஷ் என்பவ ருக்கும்  2013 IP  தேர்வு எழுதும்போது  ஏற்பட்டது. அவரது நிலை குறித்தும் நம்முடைய மாநிலச் சங்கம் அப்போது  பிரச்சினையை எடுத்தது.

ஆனாலும் எல்லா ஊழியர்களும் நீதிமன்றம் செல்ல இயலாது அல்லவா ? எனவே நாம் இது குறித்து  அகில இந்திய சங்கத்தின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை நம்முடைய தற்போதைய அகில இந்திய சங்கத்தின் தலைவர் மூலம் எடுத்துச் சென்று  அதனால்  கடந்த 20.10.2015 அன்று இலாக்கா முதல்வருக்கு  நம்   பொதுச் செயலர் மூலம் கடிதம்  அனுப்பி னோம்.  ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட கடிதத்தின் நகல் மீண்டும்  கீழே  உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம்.

இதன் விளைவாக  கடந்த 10.12.2015 அன்று  இது குறித்து அடிப்படை விதிகளின் மீதான தெளிவான  இலாக்காவின் விளக்க  உத்திரவை  நாம் பெற்றுள்ளோம். இது நமது  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்  இடை விடாத  முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

இதனால்  இனி எந்த  இலாக்கா தேர்வுகளிலும் ஒரு ஊழியர் மீது CONTEM PLATION  OF DISC. PROCEEDINGS, OR ON  DISC. PROCEEDINGS OR UNER SUSPENSION OR  AWARDED WITH  THE PENALTY OF CENSURE  இருந்தால் கூட அவரை அந்த காரணம் காட்டி  இலாக்கா  தேர்வு  எழுத  அனுமதி மறுக்க முடியாது என்பதேயாகும்.

இந்த  உத்திரவு மூலம்   நாடு  முழுமைக்கும்  அனைத்து  ஊழியர்களும் பயன் பெறுகிறார்கள்.     ஏனென்றால் ,  இலாக்கா  தேர்வுக்கான NOTIFICATION லேயே இந்த CONDITION  இது  வரை  நிரந்தரமாக இருந்து வந்தது. 

இதனைக் காரணம் காட்டி  கீழ்மட்ட அதிகாரி முதல்  CHIEF  PMG வரை  பல அதிகாரிகள்  பல ஊழியர்களை தேர்வு எழுத  அனுமதிக்காமல்  இருந்து வந்தனர் .அப்படி  பாதிக்கப்பட்ட  தோழர்  ஒருவரே   தஞ்சை  கோட்டத்தை சேர்ந்த  திரு. சௌந்தரராஜன் அவர்கள். கீழே பார்க்க  கடிதங்கள் மற்றும் உத்திரவின் நகல்களை . இதனை அனைத்து ஊழியர்களுக்கும்  தெரிவிக் கவும்.