மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் , தமிழ்நாடு கிளை சார்பாக கடந்த 20.01.2016 அன்று சென்னையில் CPMG அலுவலக வளாகத்தில் ஆயிரக் கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொண்ட எழுச்சி மிக்க முழு நாள் தார்ணா போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தார்ணா போராட்டத்திற்கு மகா சம்மேளனத்தின் தமிழக தலைவர் தோழர். J . இராமமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையுடன் போராட்டத்தை துவக்கி வைத்தார். மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்கள் துவக்க உரையாற்றி , ஊதியக் குழுவின் பாதகமான பரிந்துரைகள் குறித்தும் அதன் மீது மாற்றம் வேண்டி NJCA மற்றும் அஞ்சல் JCA அளித்த கோரிக்கை மனு குறித்தும் தெளிவாக விளக்கிப் பேசினார். பின்னர் அஞ்சல் RMS ஓய்வூதியர்கள் சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலர் தோழர். K . ராகவேந்திரன் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
உணவு இடைவேளையில் SRMU சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். M . கண்ணையா அவர்கள் 400 க்கும் மேற்பட்ட தோழர்களுடன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரயில்வே பகுதியில் இருந்து அதன் பொதுச் செயலர் நம் பகுதியில் நடைபெற்ற போராட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டது, தற்போதைய மகா சம்மேளன தலைமை இருக்கும் காலத்தில் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத் தகுந்த தொழிற்சங்க வரலாற்றுப் பதிவு ஆகும். இது ஊழியர் சங்கங்களிடையே ஏற்பட்டிருக்கும் பரந்த ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.
உணவு இடைவேளைக்குப் பிறகு, சாஸ்திரி பவன் COC , ராஜாஜி பவன் COC, கல்பாக்கம் அணுசக்தி துறை ஊழியர் சங்கம், வருமான வரித்துறை, மதுரை மாவட்ட மகா சம்மேளனம் போன்ற உறுப்புச் சங்கங்களின் தலைவர்கள் , அஞ்சல், RMS பகுதி தலைவர்களான அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS, மற்றும் தோழர். ரகுபதி, தோழர். மனோகரன் , தோழர். வீரமணி, தோழர். கண்ணன், தோழர். பரந்தாமன், தோழர். ரமேஷ் ,தோழர். K .R . கணேசன், தோழர். சந்தோஷ்குமார்,தோழர். கார்த்திகேயன், தோழர். தனராஜ், தோழர். சிவகுருநாதன் , தோழர். மோகன், தோழர். மணிமேகலை, தோழர். ஏஞ்சல் சத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.
தமிழகத்தின் பல்வேறு கோட்டங்களில் இருந்து அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மாநிலச் சங்க நிர்வாகிகள், கோட்ட/ கிளைச் செயலர்கள் ஏராளமான உறுப்பினர்களுடன் கலந்து கொண்டது சிறப்பு ஆகும்.
இறுதியாக அஞ்சல் நான்கின் முன்னாள் மாநிலச் செயலரும், மகா சம்மேளனத்தின் முன்னாள் தமிழக தலைவருமான மூத்த தலைவர் தோழர்.AGP அவர்கள் தார்ணா போராட்டத்தை முடித்து வைத்து வாழ்த்திப் பேசினார். மகா சம்மேளனத்தின் தமிழக பொருளாளர் தோழர். சுந்தரமூர்த்திஅவர்கள் (வருமான வரித்துறை சங்கத்தின் மாநிலத் தலைவர்) நன்றியுரையுடன் கோஷங்கள் விண்ணை முட்ட தர்ணா போராட்டம் நிறைவுற்றது.
CPMG அலுவலக வளாகாமே தலைகளால் நிரம்பிய ஒரு போராட்டம் என்று வரலாற்றுப் பதிவு செய்தது இந்த தார்ணா போராட்டம் என்றால் அது மிகையாகாது. நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் நகல்களை கீழே பார்க்கலாம்.