"அஞ்சா நெஞ்சன் " தோழர் பாலு அவர்களின்
நினைவேந்தல் நிகழ்ச்சி !
கடந்த 10.01.2016 அன்று மதியம் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் , 'அஞ்சா நெஞ்சன்' என்று அனைவராலும் அன்போடும் பெருமதிப் போடும் அழைக்கப்படும் தோழர். பாலு என்கிற தோழர். N பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி மூத்த தலைவர்களின் நினைவுப் பகிரல்களோடு வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக தோழர். பாலு அவர்களின் உருவப் படத்தினை தோழர். AGP அவர்கள் திறந்து வைத்து மாலை அணிவித்த பின் அனைவராலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்திற்கு தமிழக அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். P . மோகன் அவர்கள் தலைமையேற்று சிறப்புற நிகழ்வுகளை நடத்தினார். கூட்டத்தில் முதுபெரும் அஞ்சல் தொழிற்சங்க இயக்கத் தலைவர் தோழர். AGP அவர்கள், அஞ்சல் மூன்றில் முன்னாள் பொதுச் செயலர் 'அறிவு ஜீவி' தோழர். KVS அவர்கள் , அகில இந்திய சுருக்கெழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். முருகதாஸ் , NFTE தமிழ் மாநிலச் செயலர் தோழர். பட்டாபிராமன், சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர்.A . மனோகரன், சம்மேளனத்தின் உதவி மாபொதுச் செயலர் தோழர். S . ரகுபதி, அஞ்சல் மூன்றின் அகில இந்தியத் தலைவரும் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலருமான தோழர். J R , அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். A . வீரமணி, தமிழக NFPE இணைப்புக் குழுத் தலைவர் மற்றும் R 4 மாநிலச் செயலர் தோழர். பரந்தாமன், இணைப்புக் குழு கன்வீனர் மற்றும் P 4 மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K . ரமேஷ், NFPE GDS சங்கத்தின் துணைப் பொதுச் செயலரும் மாநிலச் செயலருமான தோழர். R . தனராஜ், நிர்வாகப் பிரிவு சங்கத்தின் மாநிலப் பொருளர் தோழர். ரகுபதி உமாசங்கர் , அஞ்சல் நான்கின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V . ராஜேந்திரன், அஞ்சல் மூன்றின் முன்னாள் அகில இந்திய செயல் தலைவர் தோழர் . N .G ., RMS மூன்றின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். K . சங்கரன் உள்ளிட்ட பல முன்னாள் /இந்நாள் நிர்வாகிகள் மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தோழர். பாலு அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் மாநிலமெங்கும் இருந்து நூற்றுக் கணக்கான நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு கீழே தருகிறோம்.