Saturday, December 11, 2010

GDS ஊழியர்களின் பணிகளை பாதுகாத்திட முயற்சி எடுத்த பொதுச் செயலர் KVS அவர்களுக்கு நன்றி! நன்றி!!

VIOLATION OF DIRECTORATE ORDERS ON ENGAGEMENT OF CASUAL LABOURERS


அன்புத் தோழர்களே !

நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் CASUAL LABOURER களின் பணிகளை குறிப்பிட்ட சில பணிகளை மட்டும் இனி MTS ஊழியர்கள் பார்க்க வேண்டும் என்று உள்ளது. இது கூட நமது எதிர்ப்புக்குரியதே ! ஆனால் இதையும் தாண்டி நமது CPMG அவர்கள் இந்த உத்திரவை தன்னிச்சையாக தங்கள் வசதிக்கு மாற்றி கீழ்மட்டம் வரை , அதாவது SINGLE HANDED S .O. வரை இந்த உத்திரவை நீட்டித்துள்ளார். அதிலும் கொடுமை என்னவென்றால் MTS பணிக்கோ அல்லது பதவிக்கோ அல்லது சம்பள உயர்வுக்கோ சிறிதும் சம்பந்தம் இல்லாத அப்பாவி GDS ஊழியர்கள் இனி SWEEPER WATER CARRIER பணிகளை சேர்த்துப் பார்க்கவேண்டுமாம் . DG உத்திரவில் இல்லாததை கூட இவர்களாகப் போடும் கொடுமை இங்கே நடக்கிறது . இந்த பிரச்சினையை நமது பொதுச் செயலர் KVS அவர்களிடம் நாம் எடுத்துச் சென்றோம் நமது பொதுச் செயலர் KVS அவர்களும் DG அவர்களிடம் விவாதித்ததின் விளைவாக நமது  CPMG  க்கு  இந்த உத்திரவை ரத்து செய்ய அறிவுறுத்துவதாக கூறியுள்ளார்.