Tuesday, September 27, 2011

TO THE KIND NOTICE OF OUR BELOVED CHIEF PMG.

இந்த வலைத் தளத்தை மதிப்புக்குரிய CHIEF PMG  அவர்கள்  பார்ப்பாரா ?

சமீபகாலமாக  இலாக்கா உத்திரவுகளையோ அல்லது உயர் அதிகாரிகளின்
உத்திரவு களையோ,  DG  அவர்களின் உத்திரவுகளையோ சற்றும் மதிக்காத
போக்கு கீழ் மட்ட அதிகாரிகளிடம்  பெருகிவருகிறது . இந்தப்  போக்கு மிகவும்
ஆபத்தானது  என்பதை CHIEF  PMG அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்

ஆட்டை கடித்து ,  மாட்டை  கடித்து ,  கடைசியில் மனிதனையே கடிக்கும்
போக்காக  இது மாறிவிடும்  அல்லவா ?

1. DG  அலுவலக  எண் 08/09/2011-SR  DT. 6.7.2011 ன்படி  எந்த அஞ்சலகமும் 
    மூடப்  படாது , தேவையானால்  இடம் மாற்றி அமைக்கப் படும் என்று 
    இலாக்கா  முதல்வர்  கையெழுத்துப் போட்டு சுற்றுக்கு அனுப்பியுள்ளாரே 
    நீங்கள் பார்க்கவில்லையா ?  DG  உத்திரவை மீறி அஞ்சலகத்தை அறிவிப்பு
    கூட இல்லாமல்  மூடுகிறீர்களே ?  இது DG  அவர்களை அவமானப் படுத்தும் 
    செயல் அல்லவா?  என்று கோட்டச் செயலர் கேட்டதற்கு ...  DG உத்திரவை 
    குப்பையிலே போடு  என்று சொல்லுகிறாராம்  ஒரு கோட்ட அதிகாரி.  CPMG 
    அவர்களே !  இதில் உங்களுக்கு உடன்பாடு  உண்டா ?   

2 . DG உத்திரவு எண் 16/56/2011-SR  DT. 8.7.2011 ன் படி விடுமுறை நாட்களில் 
     பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் , மேளாக்கள் என்று எதுவும் நடத்தக் 
     கூடாது என்றும் இது ஊழியரின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும் 
     என்று உள்ளதே !  ஆனால் நீங்கள் DG  உத்திரவை  மீறி பயிற்சி வகுப்பு 
      ஞாயிறு அன்று நடத்த உத்திரவு இட்டுள்ளீர்களே !  இது DG  உத்திரவை 
     மீறிய செயல் அல்லவா ?  என்று கேட்டதற்கு  ஒரு கோட்ட அதிகாரி 
     கிண்டலாக " போங்கப்பா ...  எங்க PMG க்கே  விளங்கிவிட்டது .... நீங்க 
     வேற .....   என்று  கேலி  செய்கிறாராம்.  CPMG  அவர்களே ! இதில் 
     உங்களுக்கு  உடன்பாடா ?

3 .  இலாக்கா உத்திரவுப் படி  மொத்த வேலை நேரமான 8  மணி நேரத்தில் 
     1/2 மணி நேரம் உணவு இடைவேளை . மீதமுள்ள 7 1/2 மணி நேரத்தில் 
     5  மணி நேரம் மட்டுமே   BUSINESS HOURS  என்று உள்ளது . மீதி 2 1/2 மணி 
     நேரம்  பணம் சரிபார்த்து  TREASURY யில் கட்டவும் , SPEED POST, PARCEL,
     REGISTERED POST, M.O., EB BILL, TELEPHONE BILL  இத்தியாதி இத்தியாதி 
     என்று சரிபார்த்து  லிஸ்ட் எடுத்து  பை கட்டி , ரிப்போர்ட்  எடுத்து ,  NET இல் 
     எல்லாவற்றையும் TRANSMISSION  செய்ய வேண்டுமே ? இதற்க்கு உள்ள 
     நேரமே போதாதே ?  இதில் 7 மணி நேரம் BUSINESS HOURS இருக்க வேண்டும்
     என்கிறீர்களே ? CPMG  உத்திரவு  எண் TCA/52-39/97 DT. 13.06.2006 இல் கூட 
     இதைத் தானே சொல்லியிருக்கிறார்கள்  என்று  ஒரு கோட்டச் செயலர் 
     கேட்டதற்கு .....  அதெல்லாம் வேற    DG  .... வேற  CPMG ... இப்ப அவரெல்லாம்
     RETIRE ஆகி  போய்ட்டாங்க ...  வெவரம் இல்லாதவங்க..இப்ப எல்லாமே வேற
      ...நீ போய்  உன்   வேலையைப் பாரு.... என்று  சொல்கிறாராம்   இன்னொரு
     கோட்ட அதிகாரி .  CPMG அவர்களே !  இதுகூட உங்களுக்கு உடன்பாடா ?

4 . இன்னொரு கோட்ட அதிகாரியோ " கட்டடம்  பழசு ...  இடிச்சுட்டுக் கட்டப் 
     போறோம் ...  மொதல்ல இடத்தைக் காலி பண்ணுங்க ...  அப்புறம் போஸ்ட் 
     ஆபீஸ் வைச்சுக்கலாம் ...  என்றாராம் .....  கோட்டச் செயலர்   வெளியே 
     வந்ததும் ....  லூசுப் பசங்க ....  எவன் போஸ்ட் ஆபீஸ் கட்டப் போறான் ...
     அந்த இடத்திலே  இடிச்சிட்டு  ஒரு ஹோட்டல்  கட்டலாம்னு PMG சொல்லி
     இருக்கார் ...  நல்ல லாபம் (?)   வரும்ல ....  இது தெரியாத பசங்க .... போஸ்ட் 
     ஆபீஸ் ...  போஸ்ட் ஆபீஸ் ன்னு கட்டிக்கிட்டு அழறானுங்க "  என்று 
    கொச்சையாக ' கமெண்ட்'  அடித்தாராம்   அந்த அதிகாரி .  CPMG அவர்களே 
     இதுவும் கூட  உங்களுக்கு  உடன்பாடா ? 

     இப்படி தினம் தினம்  ஒரு நாடகம் ...  நடப்பது எல்லாம் உங்களுக்குத் 
     தெரியுமா ?  தெரியாமலேயே  நீங்கள் இருக்கிறீர்களா ? 
      கடிவாளம் இல்லாத குதிரைகள் ....  காட்டாற்றில் கொண்டுவிடும் ...
      கடிவாளம் இடுங்கள் .....  முகத்திற்கு முன்னர் வைக்கும் துதிகளை 
      ஒதுக்குங்கள் ....  முதுகுக்குப் பின்னரும்  பாருங்கள் ....  தீயவர்கள் 
       அங்கேதான் உள்ளார்கள் .... உங்கள் நிர்வாகம் சிறக்கும் என்று 
      எண்ணுகிறோம் ....  ஊழியர் ஒத்துழைப்பு என்றும் இலாக்காவின் 
      வளர்ச்சி நோக்கி........  நிச்சயம் உண்டு ...

      அரசு எவ்வழி .... குடிமக்கள் அவ்வழி ....  என்ற நிலையில் ஊழியரும் 
      இலாக்கா சட்டத்தை ,  DG  உத்திரவை , CPMG உத்திரவை  மீறாமல் 
      இருக்க வேண்டுமானால் ...  உங்கள் கீழுள்ள அதிகாரிகளும் அவ்வாறே
      கடைப் பிடிக்க வேண்டும் ....    உங்கள் செயலை நோக்கி காத்து 
      நிற்கிறோம் . நன்றியுடன்  ...  

      அஞ்சல் ஊழியர்கள்  நாங்கள் . ....  ஹோட்டல்  ஊழியர்கள் அல்ல  ....