Tuesday, January 1, 2013

NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுக் கூட்டம்

அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நமது NFPE  சம்மேளனத்தின் உறுப்புச் சங்கங்கள் அடங்கிய  தமிழ் மாநில இணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (31.12.12)  சென்னை  எழும்பூரில் , தோழர் M . கண்ணையன் , கன்வீனர்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில்  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS  நான்கு, நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, SBCO , AIPEU  GDS NFPE  ஆகிய  மாநிலச் சங்கங்களின் மாநிலச் செயலர்கள், தலைவர்கள் கலந்துகொண்டார்கள். 

கூட்டத்தில்  மாநில இணைப்புக்  குழுவை  புதுப்பிப்பது , RJCM  செயலர்  புதிதாகத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட  பல  பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன. 

கூட்டத்தின் முடிவாக   NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின்  தலைவராக  தோழர். K . ராஜேந்திரன், மாநிலச் செயலர், RMS  நான்கு அவர்களும் ,  கன்வீனர் ஆக   தோழர்  J . ராமமூர்த்தி, மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று  அவர்களும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அதேபோல  RJCM  அமைப்பின்  ஊழியர் தரப்புச் செயலர்(SECRETARY , STAFF  SIDE )   ஆக  தோழர். J . ராமமுர்த்தி, மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று அவர்களை NFPE  தரப்பில்  எதிர்வரும் RJCM  உறுப்பினர்களின் கூட்டத்தில்  முன்மொழிவதாக NFPE  தமிழ் மாநிலச் சங்கங்களின் சார்பில்  ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட   நிர்வாகிகளுக்கு  நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.