Sunday, January 6, 2013

REVERSION ORDERS ISSUED BY THE DIRECTOR , PTC, MADURAI QUASHED BY OUR EARNEST EFFORTS

அன்புத் தோழர்களே வணக்கம் !


அஞ்சல் பயிற்சி மையம் , மதுரையில் LGO  விலிருந்து எழுத்தராகத் தேர்வு பெற்று  பணிப்  பயிற்சிக்குச் சென்ற  தோழர்களில் 12 பேர் ,  வகுப்புத் தேர்வில் 60% க்குக் குறைவாக மதிப்பெண்  பெற்றதால் , பயிற்சி நீடிக்கப்பட்டு , பின்னரும்  அடுத்த  தேர்வில் 60% மதிப்பெண்களை  எட்ட வில்லை என்று கூறி  , பயிற்சி மைய இயக்குனரால்  தகுதியற்றவர்களாக  பரிந்துரைக்கப்பட்ட செய்தியையும் ,  அதன் தொடர்ச்சியாக  உடன் இரு தோழர்கள் திருச்சி மண்டலத்தில்  பணி  இறக்கம் செய்யப்பட்டு MTS /MAIL  MAN  ஆக பணிக்கப் பட்டதையும் கட ந்த  27.12.2012 அன்று  நம்முடைய  வலைத்தளத்தில் நாம் பிரசுரித்திருந்தோம். 


இதனை எதிர்த்து , இது சட்ட விரோதம் என்பதை சுட்டிக்காட்டி  அஞ்சல் மூன்று மாநிலச் செயலரும், RMS  மூன்று மாநிலச் செயலரும்  நமது CPMG  அவர்களுக்குக் கடிதம் அளித்துப் பேசினோம். கடிதத்தின் நகல்  ஏற்கனவே நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்ததை  நினைவு கூர்கிறோம். 


மேலும் கடந்த 28.12.2012 அன்று  புது  டெல்லியில் நடைபெற்ற JCM  இலாக்காக் குழு கூட்டத்தின் போது  இது குறித்து DG  அவர்களுடன் நமது  JCM  ஊழியர் தரப்புத் தலைவர் தோழர். KVS  அவர்கள் விவாதித்ததாகவும், அதன் அடிப்படையில்  உடன் இந்த உத்திரவு விலக்கிக்  கொள்ள CPMG , TN  அவர்களுக்கு உத்திரவிடப்படும்  என்று  DG  அவர்கள்  உறுதியளித்த தாகவும்  நாம் 28.12.2012 அன்றே செய்தி வெளியிட்டி ருந்தோம்.  


தற்போது அந்த உத்திரவு விலக்கிக்  கொள்ளப் பட்டது மட்டுமல்லாமல் , பதவி இறக்கம் செய்யப்பட்ட தோழர்கள்  மீண்டும்  பதவி உயர்வு செய்யப்பட்டு SORTING ASSISTANT  ஆகப்  பதவி நியமனம் வழங்கிட  CPMG  அவர்கள் உத்திரவு  அளித்துள்ளார்கள் என்பதை  மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

R 3 'T ' கோட்டச் செயலர்  நமது மாநிலச் சங்கங்களுக்கு  நன்றி தெரிவித்து  குறுஞ் செய்தியும் அனுப்பியுள்ளார். 


இது  சட்ட விரோதமாக அடாவடி  உத்திரவு  இடும்  தவறான அதிகாரிகளுக்கு  ஒரு பாடம்  என்பதை அறிவுறுத்த விரும்புகிறோம் !


இது நமது மாநிலச் சங்கங்களின்  விடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதையும் பதிவு செய்கிறோம். இந்தப்  பிரச்சினையில்  உடன் தலையிட்டு , உயர் அதிகாரிகளுடன்  பேசி  பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த நமது  தலைவர்  தோழர் KVS  அவர்களுக்கு  நம் மாநிலச்  சங்கங்களின்  நன்றியினையும்  பதிவு செய்கிறோம்.


அநீதி என்றும் வென்றதில்லை !                                 அதிகார மமதையும் தான் !

இந்த நிகழ்வு குறித்து  உங்கள் உணர்வுகளை கீழே உள்ள   COMMENTS  பகுதியில்  பதிவு செய்திட வேண்டுகிறோம் !