நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகளும் ஆட்பற்றாக்குறையும்
அஞ்சல் ஊழியர் போராட்டமும்
ஒரு வழியாக தமிழக அஞ்சல் வட்டத்தில் நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது, புதிதாக பணியில் சேரும் ஊழியர்களை விட ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இது கிட்டத்தட்ட 50% ஆட்பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க வழி ஏற்படுத்தியுள்ளது. ஒரு வகையில் இது தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் மூன்று கட்ட போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியே ! 1 1/2 மாதங்கள் கிடப்பில் கிடந்த தேர்வு முடிவுகள் , நம்முடைய தமிழகம் தழுவிய போராட்ட உந்துதலால் , ADDL CHARGE ஆக வந்த கர்நாடகா CPMG யின் கவனத்தை ஈர்த்து உடன் தேர்வு முடிவுகள் நம்முடைய மாநிலம் தழுவிய முதற்கட்ட போராட்டத்திற்கு அடுத்த நாளே வெளியிடப்பட்டுள்ளது நிச்சயம் நமக்குக் கிடைத்த வெற்றியே !
2010 க்குப் பிறகு 2014 ஆம் ஆண்டுதான் மிக அதிக அளவில் ஆளெடுப்பு நடைபெற்றுள்ளது. 2010இல் 1640 காலியிடங்கள் நிரப்பப்பட்டன. 2014 இல் நேரடி தேர்வில் மட்டும் 1306 காலியிடங்கள் நிரப்பிட RESULT வெளியிடப் பட்டுள்ளது.
நம்முடைய சங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாக 2014 டிசம்பர் 31 வரையான ANTICIPATED VACANCY யும் கணக்கில் எடுக்கப்பட்டு இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த வருடம் FEBRUARY மாதத்திலேயே செய்யப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய அம்சமாகும். தற்போது 1306 நேரடி தேர்வு காலியிடங்களில் 864 காலியிடங்கள் அஞ்சல் பகுதி எழுத்தருக்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இது அறிவிக்கப் பட்ட 641 காலியிடங்களுடன் RESIDUAL காலியிடங்களும் , கடந்த ஆண்டில் நேரடி எழுத்தரில் நிரப்பப்படாத காலியிடங்களும் சேர்த்து அறிவிக்கப் பட்டதாகும். இது நமக்கு கிடைத்த வெற்றியே !
RMS SORTER - 287 மற்றும் PA CO/RO - 52 PA SBCO - 73 FGN POST - 15 MMS - 8 மற்றும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு RLO - 7 காலியிடங்கள் நிரப்பிட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தவிர LGO விலிருந்து எழுத்தராக நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் வெளிவர வேண்டும் . அதனை விரைவு படுத்திட நிர்வாகம் உடனடி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதில் 280 காலியிடங்கள் நிரப்பப்பட தேர்வு நடந்துள்ளது. இதில் தேர்வு பெற்று ஊழியர்கள் வந்தால் அடுத்தது 25% சுமை குறையும்.
மேலும் LSG பதவி உயர்வு இனியும் காலதாமதமின்றி அளித்திடவேண்டி நாம் போராட்ட அறிவிப்பு செய்துள்ளோம். இந்தக் கோரிக்கையின் மீதும் எதிர்வரும் 27.02.2015 இல் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு நாம் வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்க உள்ளோம்.
LSG பதவி உயர்வு அளிக்கப்பட்டால் , HSG II , HSG I பதவிகள் - புதிய HSG I RECTT விதிகளின் படி நிரப்பப்பட்டால் , நிச்சயம் மேலும் 450 எழுத்தர் காலியிடங்கள் இந்த ஆண்டு சேர்த்து அறிவிக்கப்படும். இதில் மீதமுள்ள காலியிடங்கள் நிரப்பிட வாய்ப்பு ஏற்படும்.
எத்தனையோ GDS ஊழியர்களின் வழக்குகளில் SLP மேல்முறையீடு செய்யவேண்டும் என்று காலத்தையும் , இலாக்கா பணத்தையும் வீணடித்து டெல்லிக்கு அதிகாரிகளை அனுப்பும் மாநில நிர்வாகம் , LSG பிரச்சினையில் பலமுறை கடிதம் எழுதியும் DTE இல் இருந்து பதில் வரவில்லை என்று மூன்று ஆண்டுகளாக சாக்கு போக்கு சொல்வதை நிறுத்தி, உடனடியாக DTE க்கு ஒரு அதிகாரியை பதில் பெறுவதற்கென்றே அனுப்பிட செய்ய வேண்டும். அப்படி செய்வார்களா?
இது ஊழியர்கள் பிரச்சினை ஆயிற்றே? அரசாங்க பணத்தை எப்படி விரயம் செய்ய முடியும் என்று மாநில நிர்வாகம் நினைக்கிறது போலும் . நிர்வாக காரணங்களுக்கு பதில் பெற வேண்டுமென்றால் உடனே , அந்த நிமிடமே EMAIL இல் பதில் அனுப்ப வேண்டும் என்று நிர்பந்திக்கும் நிர்வாகம் , பதில் அடுத்த நிமிடமே அனுப்பவில்லை என்றால் ' IT WILL BE VIEWED VERY SERIOUSLY' என்று MAIL அனுப்பும் நிர்வாகம் , இந்தப் பிரச்சினையில் மட்டும் ஏன் ஆண்டுக்கணக்கில் இந்த சுணக்கம் காட்டுகிறது ? கீழ் மட்ட ஊழியர்கள்தானே என்ற அக்கறையின்மைதான் காரணம் . "அவர்கள் " பதவி உயர்வு என்றால் ஒரே ஆண்டில் பலமுறை கூட DPC போடப் படுகிறதே ?
"நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் "
என்கிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள். நோய் தீர்க்குமா நிர்வாகம் ? போராட்டத்தில் தள்ளுமா நிர்வாகம் ? பொறுத்திருந்து பார்ப்போம் ? 27.02.2015 தேதியை நோக்கி பயணிப்போம்.
ஊழியர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பை இந்த வலைத்தளத்தின் மூலம் மாநில நிர்வாகத்திற்கு நாம் பதிவு செய்கிறோம்.