திருவண்ணாமலை - ஆரணி அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு மற்றும் NFPE GDS சங்கங்களின் இணைந்த சிறப்புக் கூட்டம் மற்றும் ஆரணி NFPE GDS சங்க துவக்க விழா கடந்த 01.02.2015 அன்று போளூர் அஞ்சலகத் தில் காலை 10.00 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். D. பாண்டியன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஆரணி அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர் . D. சுப்புராஜ் அவர்கள் வரவேற்புரையாற்ற, ஆரணி அஞ்சல் மூன்றின் செயலர் தோழர். M . சிவகுமார் அவர்களின் முன்னுரையுடன், திருவண்ணாமலை அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். K பிச்சாண்டி அவர்கள் துவக்க உரையாற்ற நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது.
நிகழ்ச்சியில் தலைமட்ட பிரச்சினைகள் குறித்து தி. மலை அஞ்சல் நான்கின் உதவிச் செயலர் தோழர். A . விநாயகமூர்த்தி, நிர்வாகத் தலைவர் தோழர். V .சேகர் , தோழர்.P . கருணாகரன், வேலூர் அஞ்சல் நான்கின் நிர்வாகி தோழர். ராஜேந்திரன் , NFPE GDS சங்கத்தின் கோட்டச் செயலர் தோழர். S .முனுசாமி , NFPE GDS சங்கத்தின் மாநில உதவிச் செயலர் தோழர். R . சிவகுரு உள்ளிட்ட தோழர்கள் விளக்கிப் பேசினார்கள் .
CBS , CIS பிரச்சினைகள் குறித்தும் , இதன் விளைவாக பொதுமக்கள் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் அஞ்சல் மூன்றின் மாநில உதவிச் செயலர் தோழர். S .வீரன் அவர்கள் தெளிவாக எடுத்துப் பேசினார். GDS ஊழியர்களின் தலமட்ட மற்றும் அகில இந்திய பிரச்சினைகள் குறித்தும் , ஏழாவது ஊதியக் குழுவின் பார்வையில் GDS ஊழியர்களின் ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து கொண்டு செல்ல NFPE GDS சங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், GDS ஊழியர் களுக்கு CIVIL SERVANT STATUS வழங்கிட டெல்லியில் தொடரப் பட்டுள்ள நீதிமன்ற வழக்கு குறித்தும் அதன் மாநிலச் செயலர் தோழர். R . தன்ராஜ் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார் .
ஏழாவது ஊதியக் குழு முன் நம் கோரிக்கைகள், அது தொடர்பான நம் இயக்கங்கள் , எதிர்வரும் 06.05.2015 முதலான JCA வின் காலவரையற்ற வேலை நிறுத்தம், TASK FORCE ன் CORPORATISATION குறித்த பரிந்து ரைகள் மாநில அளவிலான பிரச்சினைகளின் தீர்வுக்கான அறிவிக்கப் பட்டுள்ள அஞ்சல் மூன்றின் போராட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி விரிவான உரையினை வழங்கினார்.
முடிவில் AIPEU GDS NFPE யின் ஆரணி கிளைச் சங்கம் கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட GDS ஊழியர்களை வைத்து முறையாக துவக்கப்பட்டது.
ஆரணி GDS கிளையின் தலைவராக தோழர். S .லூர்துசாமி , GDS SV, வந்தவாசி அவர்களும் , கிளைச் செயலராக தோழர். K . சௌந்தரராஜன் , GDS MD, VELLERI BO அவர்களும், நிதிச் செயலராக தோழர் M . பிச்சாண்டி GDS MD, THATCHAMBADI B.O. அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
புதிய கிளைச் சங்கத்தை தோற்றுவிக்கும் முயற்சியில் துணை நின்ற ஆரணி தோழர். சுப்புராஜ் மற்றும் தோழர். சிவகுமார் ஆகியோருக்கும் நம் வாழ்த்துக்கள் .
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த தி. மலை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். பிச்சாண்டி , அஞ்சல் நான்கின் தோழர். விநாயகமூர்த்தி, GDS கோட்டச் செயலர் தோழர் முனுசாமி ஆகியோருக்கு நம்முடைய அன்பான பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் .
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் ஆரணி GDS சங்கத்திற்கும் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . நிகழ்ச்சி யில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில .......உங்கள் பார்வைக்கு.