முதற்கட்ட போராட்டம் முழு வெற்றி !
அடக்குமுறைக்கு அஞ்சிடோம் !
ஆணவத்திற்கு அடிபணியோம் !
அன்புத் தோழர்களே ! தோழியர்களே !
அடக்குமுறைக்கு அஞ்சிடோம் !
ஆணவத்திற்கு அடிபணியோம் !
அன்புத் தோழர்களே ! தோழியர்களே !
உங்கள் அனைவருக்கும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று மற்றும் தமிழ் மாநில NFPE GDS சங்கங்களின் அன்பு வணக்கங்களும் வீர வாழ்த்துக்களும் .
மாநில அளவிலான அஞ்சல் மூன்று மற்றும் NFPE GDS சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவினை ஒட்டி, நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர்கள் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரியும், TARGET என்ற பெயரில் ஊழியர்கள் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதல்களையும் மற்றும் அதிகார அத்து மீறல்களையும் கண்டித்தும் 40 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் (17.2.2015) தமிழகம் தழுவிய அளவில் அனைத்து கோட்ட மற்றும் கிளைகளில், முதல் கட்ட போராட்டமாக கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டம் பரவலாக , சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன இதுவரை மாநிலச் சங்கத்திற்கு வந்திருக்கும் தகவல்களையும் கிளைகள் தோறும் நடைபெற்ற நிகழ்வுகளின் புகைப்பட நகல்கள் சிலவற்றையும் உங்களின் பார்வைக்கும் மாநில அஞ்சல் நிர்வாகத்தின் பார்வைக்கும் நாம் கீழே அளித்துள்ளோம்.
புகைப்படம் அனுப்பாமல் , கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் கிழக்கு, ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, .உடுமலைபேட்டை, திருவண் ணாமலை, தாம்பரம் , அம்பத்தூர் உள்ளிட்ட கோட்ட/ கிளைகளில் ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றதாக மாநிலச் சங்கத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலச் சங்கத்திற்கு தகவல் அளிக்காத கோட்ட/ கிளைச் செயலர்கள் உடன் தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். கிளைகளில் நடைபெற்ற ஆர்பாட்ட நிகழ்வின் புகைப்படங்களையும் அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம். அவையும் மாநில அஞ்சல் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும். மேலும் SAVINGRAM அனுப்பிடாத கோட்ட/ கிளைச் செயலர்கள் உடன் அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நம்முடைய அடுத்த கட்ட போராட்ட தேதி அகில இந்திய சங்கத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும் தலைவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் 24.02.2015 க்கு பதிலாக எதிர்வரும் 27.02.2015 அன்று மத்திய JCA போராட்டத்துடன் சேர்த்தே நடத்திட முடிவெடுக்கப் பட்டுள்ளது . மேலும் மத்திய JCA அறைகூவலின் படி எதிர்வரும் 20.02.2015 அன்று அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்தினை சிறப்பாக நடத்திடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று மாலை நமது வலைத் தளத்தின் மூலமும் SMS மூலமும் ஒவ்வொரு கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் மாநிலச் சங்க நிர்வாகிகளுக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்படும் . மேலும் விரிவான சுற்றறிக்கையும் அனுப்பப்படும். அந்த அடிப்படையில் மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள் செயல்பட வேண்டுகிறோம். உங்களின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்.
அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயார் நிலையில் இருக்குமாறு வேண்டுகிறோம். போராட்டம் தீவிரப்படுத்தப்படும். விபரங்கள் அடுத்த சுற்றிக்கையில் வெளியிடப்படும். முதற்கட்ட போராட்டத்தை சிறப்பாக நடத்திய அனைத்து பகுதி தோழர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். புகைப்படங்கள், பத்திரிகை செய்தி கீழே பார்க்க :-
சென்னை பெருநகர மத்திய கோட்டம்
சென்னை அண்ணா சாலை கிளை
சென்னை பெருநகர வட கோட்டம்
சென்னை பெருநகர தென் கோட்டம்
சேலம் மேற்கு கோட்டம்
அம்பாசமுத்திரம் கிளை
திண்டுக்கல் கோட்டம்
மதுரை கோட்டம்
ஸ்ரீரங்கம் கோட்டம் - ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சலகம்
ஸ்ரீரங்கம் கோட்டம் - துறையூர் தலைமை அஞ்சலகம்
ஸ்ரீரங்கம் கோட்டம் - பெரம்பலூர் தலைமை அஞ்சலகம்
கும்பகோணம் (குடந்தை ) கோட்டம் .
கரூர் கோட்டம்
தருமபுரி கோட்டம்
நாமக்கல் கோட்டம்
தஞ்சை கோட்டம்
திருவாரூர் கிளை
மயிலாடுதுறை கோட்டம்
.
தூத்துக்குடி கோட்டம்
அரக்கோணம் கோட்டம்
திருச்செங்கோடு கிளை