PLI DECENTRALISATION க்கு பிறகு 2 ஊழியர்கள் மட்டுமே சென்னை GPO வில் அந்தப் பகுதியில் பணி செய்ய பணிக்கப்பட்டிருந்தனர். கிட்டத்தட்ட 1,25,000 பாலிசி தொடர்பான பணிகளை அந்த இரண்டு ஊழியர்கள் மட்டுமே பார்க்கவேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளானதால் கடும் அவதியுற்றனர். இது குறித்து அதன் கிளைச் செயலர் பிரச்சினையை GPO நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் அலட்சியம் செய்யப் பட்டது.
இதனால் சென்னை பெருநகர மண்டல PMG திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களிடம் கடந்த 08.10.2015 அன்று நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்று கடிதம் அளித்து விவாதித்தார். அதற்கு அவரும் உடன் பரிசீலனை செய்து ஆவன மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
தற்போது அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு 7 ஊழியர்கள் அந்தப் பகுதியில் பணியர்த்தப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 சிஸ்டம் அந்தப் பணிக்கென்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் நமது மாநிலச் சங்கத்திற்கு எழுத்து பூர்வமாக PMG, CCR அவர்கள் பதில் அளித்துள்ளார். பதிலின் நகலை கீழே பார்க்கவும்.
GPO செயலரும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதற்கு கைபேசி மூலம் நன்றி தெரிவித்துள்ளார். ஊழியர் பிரச்சினையில் அக்கறையுடன் செயல்பட்டு தீர்த்துவைத்து பதில் கடிதமும் அனுப்பியுள்ள PMG CCR திரு. மெர்வின் அவர்களுக்கு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.