Wednesday, October 14, 2015

JOINT DIVISIONAL CONFERENCE OF P3, P4 & GDS - NILGIRIS DIVISIONAL BRANCHES A GRAND SUCCESS

நீலகிரி அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு மற்றும் GDS  கோட்ட சங்கங்களின் இணைந்த  ஈராண்டு மாநாடு கடந்த 11.10.2015  ஊட்டி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு ஏற்பாடுகளை அஞ்சல் மூன்று  கோட்டச் செயலர் தோழர். A .M .சேகர், அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். R . கிருஷ்ணன், GDS  கோட்டச் செயலர் தோழர்.V . சுந்தரம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , GDS கோட்டச் சங்கத்தின் தலைவர்கள் கூட்டுத் தலைமையேற்றனர். அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர். R .கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டின் பொருளாய்வு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் தனித் தனியே நடைபெற்றன. 

நடப்பு ஈராண்டு காலத்திற்கு கீழ்க் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

அஞ்சல் மூன்று 

கோட்டத் தலைவர்        :         தோழர். L . ராமு 
கோட்டச் செயலர்           :         தோழர்  A .M . சேகர் 
கோட்ட நிதிச் செயலர்  :        தோழர். D. ராஜகோபால் 

அஞ்சல் நான்கு 

கோட்டத் தலைவர்        :         தோழர். N .J . சுப்ரமணியன் 
கோட்டச் செயலர்           :         தோழர்  R . கிருஷ்ணன்  
கோட்ட நிதிச் செயலர்  :        தோழர். G . ஜேக்கப்  சௌந்தரராஜன் 

NFPE  GDS 

 கோட்டத் தலைவர்        :         தோழர். L . சந்திரமோகன் 
கோட்டச் செயலர்           :         தோழர்   R . துரை  
கோட்ட நிதிச் செயலர்  :        தோழர்.  S . முருகன் 

பின்னர் நடைபெற்ற பொது அரங்கு நிகழ்வுக்கு அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர். L . ராமு அவர்கள் தலைமை ஏற்றார். பொது அரங்கு நிகழ்வில் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . ராமமூர்த்தி, அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். P . மோகன் , அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் ,  NFPE  GDS  சங்க மாநிலச் செயலர் தோழர்  R .தனராஜ் , அஞ்சல் RMS  ஓய்வூதியர்கள்  சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் தோழர். S . கருணாநிதி , RMS  மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். K .R . கணேசன் , அஞ்சல் மூன்றின் மேற்கு மண்டலச் செயலர் தோழர்.A . ராஜேந்திரன் , அஞ்சல் நான்கின் மேற்கு மண்டலச் செயலர் தோழர். H . ஸ்ரீதரன் , அஞ்சல் நான்கின் மாநில அமைப்புச் செயலாளர்  தோழர். V . தர்மலிங்கம் ,அஞ்சல் RMS ஓய்வூதியர்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டச் செயலாளர் தோழர். G . சாமுவேல் ஜெயராஜ்  உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். மாலை 04.30 மணிவரை தொடர் மாநாடாக நடைபெற்றது. அதுவரை சுமார் 200 தோழர்/தோழியர்கள் கலைந்திடாமல்  இறுதிவரை பங்களித்தது மாநாட்டின் சிறப்பு ஆகும் .

புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகளின் பணி சிறக்க அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த  வாழ்த்துக்கள் ! நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே  பார்க்கலாம்.