Saturday, October 10, 2015

MEETING WITH CHIEF PMG, TN ON 09.10.2015 TO DISCUSS STAFF MATTERS



CHIEF PMG  அவர்களுடன்  சந்திப்பு 

ஏற்கனவே அறிவித்தபடி, நேற்று மாலை 04.30 மணியளவில் CHIEF PMG அவர்களுடன் ஊழியர்கள் பிரச்சினை தொடர்பாக நம்முடைய சந்திப்பு நடை பெற்றது . சந்திப்பின்போது ஊழியர்கள் தரப்பில் அஞ்ச மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநிலத் தலைவர் தோழர். P . மோகன், மாநில நிதிச் செயலர் தோழர் . A . வீரமணி , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , AIPEU  GDS NFPE  மாநிலச் செயலர் தோழர்.R . தனராஜ் ஆகியோரும் நிர்வாகத் தரப்பில் CHIEF  PMG அவர்களுடன் PMG, MM  திரு.J .T.வெங்க டேஸ்வரலு , DPS  HQ  திரு. A . சரவணன்,  DY. DIRECTOR ,CEPT திரு. V .M . சக்திவேலு ஆகியோரும்  கலந்துகொண்டனர். 

சந்திப்பின்போது பேசப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதற்கான நிர்வாகத்தின் தீர்வு மற்றும் பதில்கள்  குறித்து கீழே  அளிக்கிறோம்.

1. CBS  தொடர்பான பிரச்சினைகள் குறித்து மட்டுமே கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் முழுமையாக விவாதிக்கப்பட்டது.  நமது மாநிலச் சங்கத்தின் தொடர் கடிதங்களின் அடிப்படையில் , இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள தாகவும், ஒவ்வொரு பிரச்சினைக்கும் நிச்சயம் தீர்வு அளிக்கப்படும் என்றும் CPMG  அவர்கள் உறுதி அளித்தார்.
  
 a ) முதலில் EOD  அளிப்பதால் ஏற்படும் LATE  DETENTION குறித்து பிரச்சினை தொடர்பாக, கடந்த இரு நாட்களில் INFOSYS  உடன் விரிவாக விவாதிக்கப்பட்டு, மேலும் IBM தரப்பிலும் கலந்து FINACLE SOFTWARE இல் ஒரு தீர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், 

இதன்படி எதிர்வரும் 12.10.2015 மாலை முதல் சேமிப்பு வங்கிப் பிரிவில் எல்லா VOUCHER களும் CLEAR செய்து VALIDATION கொடுத்தபிறகு POSTMASTER க்கு AUTHORIZE  செய்யப்படும் HSCOD  மூலம் எல்லா TRANSACTION  களும் COMPLETE செய்யப்பட்டதை அவர் உறுதி செய்த பிறகு "OK BUTTON CLICK" செய்தால் போதும் என்றும் இதன் பிறகு ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு கிளம்பலாம் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.  

b ) முதல் நாளைய DC  CLOSURE PROCESS  மறுநாள்  PEAK HOUR இல் எடுக்கப் படுவதாலும், அதே நேரத்தில் மிக அதிக எண்ணிக்கையில் அலுவலகங்கள் MIGRATION செய்யப்படுவதாலும்  PEAK HOUR SLOW DOWN ஏற்படுகிறது . இதனால் பொதுமக்கள் சேவை முற்றிலும் பாதிக்கப்படுகிறது. CUSTOMER  உடன்  COUNTER இல் பணியாற்றும் ஊழிர்களுக்கு தேவை யில்லாமல் மோதல் ஏற்படுகிறது என்பதை சுட்டிக் கட்டினோம். 

MIGRATION ஆல் இந்த பிரச்சினை எழவில்லை என்பதை பரீட்சார்த்தமாக கடந்த நாட்களில் சோதனை செய்து உறுதி செய்துள்ளதாகவும் DC  CLOSURE PROCESS  PEAK HOUR இல் செய்யப்படுவதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என்பதை தாங்கள் ஏற்பதாகவும் எனவே அதன் மீது INFOSYS  உடன் கலந்து EOD II STAGE மற்றும்   III STAGE PROCESS  இல் மாற்றம் ஏற்படுத்த உள்ளதாகவும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண INFOSYS  உறுதி அளித்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது. 

c) CHEQUE CLEARANCE  பிரச்சினையில் , தற்போது CBS  ஆக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் CLEARING  HOUSE  இல் இருந்து தனித் தனியே அனுப்பிடாமல்  CENTRALISED  ஆக  இந்தப் பிரச்சினையை  கையாள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஒரு மாதத்தில் இதற்கு தீர்வு காணப்படும் என்று உறுதி   அளிக்கப்பட்டது.

d) புதிதாக MIGRATE செய்யப்பட்டு வரும்  RURAL /REMOTE SINGLE /DOUBLE HANDED S.O. க்களில் ஏற்படும் NETWORK  பிரச்சினை காரணமாக அவர்கள் மாலையில்  அருகாமையில் உள்ள பெரிய அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது என்பதை சுட்டிக் காட்டினோம். இது குறித்து தங்களுக்கு எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை என்றும்  அப்படி ஏற்படும் அலுவலகங்களின் பட்டியல் அளிக்கப்பட்டால் உடன் BSNL  மற்றும  SIFY யுடன் தொடர்பு கொண்டு   இதனை தீர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.  எனவே இது குறித்து கோட்ட/கிளைச் செயலர்கள்/ மாநிலச் சங்க நிர்வாகிகள் , மாநிலச் சங்கத்திற்கு EMAIL  மூலம்  உடன் தகவல் அனுப்பிட வேண்டுகிறோம்.

2) திண்டுக்கல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்தும் தொழிற்சங்கங்களின் அறிவிப்பு பலகை வைப்பது குறித்து ஏற்கனவே அளிக்கப்பட உத்திரவு  நிறைவேற்றப்படாதது குறித்தும் விரிவாக பேசினோம். மாநிலச் சங்க புகார் குறித்து REPORT  கேட்கப் பட்டுள்ளதாகவும்  அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அறிவிப்பு பலகை பிரச்சினையில், அலுவலகத்தில் ஊழியர் தரப்புடன் கலந்து ஊழ்யர்களின் பார்வையில்படும் பிரதான இடத்தில் வைத்திட தாம் அறிவுறுத்தி யுள்ளதாகவும் CHIEF PMG கூறினார். மேலும் தானே நேரில் சென்று பார்க்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

3) மேற்கு மண்டல அலுவலகத்தில்  திருப்பி அனுப்பப்பட்ட ஊழியர்களில் மூவரை மீண்டும் மண்டல அலுவலகத்திற்கு DEPUTATION கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்கள் பயிற்சி பெறாததால் மண்டல அலுவலகத்தில் BD மற்றும் TECH  BRANCH களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே  தற்காலிகமாக 3 மாதங்களுக்கு மட்டும் DEPUTATION இல் அந்த ஊழியர்களை  அளிக்க வேண்டி CHIEF  PMG இடம்  PMG WR  அவர்கள் அனுமதி கோரி பெற்றுள்ளதாகவும்  தெரிவித்தார். மேலும் இது நீட்டிக்கப்படாது என்று உறுதி அளித்தார்.  இதர ஊழியர்களை RELIEVE செய்வது குறித்து  தனது  INSPECTION போது  நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக CPMG  அவர்கள் உறுதி அளித்தார்.

4) சென்னை GPO மற்றும் அண்ணா சாலை தபால்காரர்களின் விடுப்பு மற்றும் காலியிடங்களில்  பணி இணைப்பு செய்யாமல்  பதிலி அனுமதிக்கும் பிரச்சினையில் இது குறித்து  உடன்  உரிய அறிவுறுத்தல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

5) ANNA ROAD HPO தலைமை அஞ்சலகத்தில் எடுக்கப்பட்ட SENTRY  POST  மீண்டும் எதிர் திசையில் வைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

6) GDS  ஊழியர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒய்வு பெற்ற ஊழியர்களின்  SEVERANCE  தொகை அளிப்பது  குறித்து PFRDA  வுக்கு எடுக்கப் பட்டுள்ளது எனவும் இதுபோல  குரூப் இன்சூரன்ஸ் தொகை தற்போது வழங்கப் பட்டு வருவதாகவும் , RPLI  INCENTIVE  BILL PAYMENT  அளித்திட FUND  மண்டலங்களுக்கு ALLOTMENT செய்யப்பட்டுள்ளதாகவும், ESSENTIAL FORMS SUPPLY  உறுதி செய்திட ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.

சுமார் மாலை 06.00 மணிவரை இந்த சந்திப்பு நடைபெற்றது . ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து  மாநில நிர்வாகம் முழுமையாக தெரிந்துகொள்ளவும் அதனை முழுமையாக உணர்ந்திடவும்  இந்த சந்திப்பு  பயனாக அமைந்தது. 

இந்த சந்திப்பின்போது அளிக்கப் பட்ட உறுதிமொழியை காலதாமதமின்றி நிச்சயம்  நம்முடைய CHIEF PMG அவர்கள்  நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.  நமது  CHIEF  PMG அவர்களுக்கும் இதர மாநில நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கும் நம்முடைய நன்றி !