போனஸ் குறித்த தற்போதைய தகவல்
ஏற்கனவே மத்திய தொழிலாளர் வேலை வாய்ப்பு அமைச்சகத்தால்
செப்டம்பர் 2, 2015 வேலை நிறுத்தத்தை ஒட்டி நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது அறிவித்தபடி, உயர்த்தப்பட்ட போனஸ் இந்த ஆண்டு வழங்கப்படுமா என்பது அனைத்து மத்திய அரசு ஊழியர்களிடையே முக்கிய பிரச்சினையாக தற்போது விவாதிக்கப் பட்டு வருகிறது.
இது குறித்து தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தால் மத்திய நிதி அமைச்சகத்துக்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதன் மீது CABINET COMMITTEE க்கு பரிந்துரை செய்திடவோ அல்லது போனஸ் சட்டத் திருத்தம் செய்திட மேல் நடவடிக்கை எடுத்திடவோ மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் இல்லை. அப்படி அனுப்பப்பட்டால் பிரதம அமைச்சரின் ஒப்புதல் பெற்று CABINET COMMITTEE இன் ஒப்புதலுடன் போனஸ் சட்டத் திருத்தம்
செய்திட SPECIAL ORDINANCE கொண்டு வரப்படும்.
இதனிடையே, ஊதியக் குழு மற்றும் போனஸ் உச்ச வரம்பு உயர்த்துதல் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த கோரிக்கைகள் குறித்து விவாதித்திட எதிர் வரும் 09.10.2015 அன்று JCM NATIONAL COUNCIL கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின்னரே மத்திய அரசு BONUS உச்சவரம்பு உயர்வு குறித்த சட்டத் திருத்தம் செய்திட முடிவு எதுவும் எடுக்க வாய்ப்புள்ளது.
இந்த சூழலில் JCM NATIONAL COUNCIL ஊழியர் தரப்பு செயலராக உள்ள AIRF இன் பொதுச் செயலர் தோழர். சிவகோபால் மிஸ்ரா அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பை AIRF வலைத்தளத்தின் மூலம் செய்துள்ளார்.
"The
proposal to give Productivity Linked bonus to Railwaymen is likely to come up
today at the Cabinet meeting, this was told by highly placed sources.
If the Cabinet
decides today about 13 lakh Railway employees will get Productivity
Linked Bonus this month. Productivity-linked bonus is paid to railway
employees each year before the Dussehra festival."
அதாவது இன்றைய CABINET கூட்டம் ரயில்வே துறைக்கான தற்போது நடைமுறையில் உள்ள போனஸ் குறித்து முடிவெடுக்க உள்ளதாக இந்த செய்தி நமக்கு தெரிவிக்கிறது.