மாநில தலைமையகத்து செய்திகள்
1. எதிர்வரும் 11.12.2015 அன்று நமது சம்மேளனத்தால் அறிவிக்கப் பட்டிருந்த நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் , தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக தற்போது தமிழகத்தில் மட்டும் ஒத்திவைக்கப் படுவதாக தமிழக NFPE இணைப்புக் குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது. வேறு தேதி குறித்து NFPE COC கூடி முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் .
2. தமிழகத்தின் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த நாட்களில் (டிசம்பர் 2, 3, 4 மற்றும் 5) பணிக்கு வந்து அலுவலக உடமைகளை காத்திட்ட ஊழியர்களின் கடமை உணர்வை பாராட்டி அவர்களுக்கு அன்றைய நாட்களுக்கு பதிலாக COMPENSATORY OFF வழங்கிட நமது CHIEF PMG அவர்கள் உத்திரவிட்டுள்ளார். உத்திரவின் நகல் இதே வலைத்தளத்தில் 10 செய்திகளுக்கு கீழே SCROLL செய்து பார்க்கவும். பார்த்தவர்கள் இதர உறுப்பினர்களிடம் தெரிவிக்கவும்.
3. ஏற்கனவே கடந்த 3.12.2015 அன்று அளித்த EMAIL இன் தொடர்ச்சியாக , வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த நாட்களில் பணிக்கு வர இயலாதவர்களுக்கு SPECIAL CL வழங்கிட CPMG அவர்கள் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்து உத்திரவு வெளியிட பணித்துள்ளார். அந்த உத்திரவு நாளை கிடைக்கப் பெறலாம்.
4. தமிழகத்தின் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பணியாற்றும் இலாக்கா மற்றும் GDS ஊழியர்களுக்கு வெள்ள முன்பணம் வழங்கிடக் கோரி நாம் கடிதம் அளித்திருந்தோம். இது போலவே கடந்த 08.12.2015 அன்று நம்முடைய SECRETARY GENERAL மூலம் இலாக்கா முதல்வருக்கு ஒரு கோரிக்கை கடிதம் தமிழக அஞ்சல் மூன்று சார்பில் அளிக்கக் கோரியிருந்தோம். இதன்படி கடிதம் அளித்து கோரிக்கை எழுப்பப்பட்டது. தற்போது நம் இலாக்கா முதல்வர் அவர்கள் வெள்ள முன் பணம் மற்றும் WELFARE FUND மூலம் உதவிகள் அளித்திட இன்று (09.12.2015) உத்திரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
5. கடந்த 08.12.2015 அன்று ஊதியக் குழு அறிக்கை மீது மாற்றம் வேண்டி நம்முடைய NFPE மற்றும் FNPO சம்மேளன மாபொதுச் செயலர்கள் இலாக்கா முதல்வருடன் விவாதித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவின் நகலை கீழே 6 ஆவது செய்தியில் SCROLL செய்து பார்க்கவும்.
6. கோவை மண்டல RPLI கெடுபிடிகள் குறித்தும் ஊழியர்கள் மண்டல அலுவலகத்துக்கு தேவையில்லாமல் REVIEW MEETING என்ற பெயரில் வரவழைக்கபடுவது குறித்தும் PMG WR அவர்களுக்கு மாநிலச் சங்கம் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளது. கீழே 9 ஆவது செய்தியாக அது வெளியிடப் பட்டுள்ளது. SCROLL செய்து பார்க்கவும்.
7. ஈரோடு SR . POSTMASTER திருவாளர். A . சுந்தரராஜன் அவர்களின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து விரிவான புகார் மனு CHIEF PMG அவர்களுக்கு மாநிலச் சங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளது. கடித நகல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படம் கீழே 8 ஆவது செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது . SCROLL செய்து பார்க்கவும்.
8. மதுரை மண்டலத்தில் LSG பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கு , அந்தந்த கோட்டங்களில் காலியிடங்கள் இருந்தும் , வெளி யில் உள்ள கோட்டங்களுக்கு POSTING அளித்து உத்திரவிடப்பட்டுள்ளது. இது குறித்து CPMG அவர்களுக்கு மாநிலச் சங்கம் அளித்த புகார் கடிதம் கீழே 7 ஆவது செய்தியாக வெளியி டப்பட்டுள்ளது. SCROLL செய்து பார்க்கவும்.
9. 2011 முதல் பதவி உயர்வு பெற்ற / இறந்து போன / பணி ஒய்வு பெற்ற GDS ஊழியர்களுக்கு SDBS காரணமாக இதுவரை வழங்கப் படாமல் நிலுவையில் இருந்த SEVERANCE AMOUNT வழங்கிட மாநிலச் சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இது குறித்த விபரம் கீழே 10 ஆவது செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. SCROLL செய்து பார்க்கவும்.
மேலும் செய்திகள் உள்ளன . கடந்த நாட்களில் INTERNET கோளாறு காரணமாக வெளியிட இயலவில்லை. இன்று ஒரே நேரத்தில் அனைத்து செய்திகளையும் வெளியிட இயலவில்லை. எனவே நாளை இதர செய்திகள் வெளியிடப்படும்.
தோழமையுடன்
உங்கள் மாநிலச் செயலர்,
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் .