Thursday, December 31, 2015

WISH ALL THE READERS/ VIEWERS & COMRADES A HAPPY NEW YEAR 2016

அன்புத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் இனிய  வணக்கம் ! கடந்த மூன்று நாட்களில் சென்னை பெருநகர மண்டல PMG அவர்களுடன் சந்திப்பு , மேற்கு மண்டல PMG அவர்களுடன் இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி,  தென் மண்டல PMG அவர்களுடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி என்று தொடர்ந்து  உங்கள் மாநிலச் செயலர் ஈடுபட்டதால்  பல செய்திகளை வலைத்தளத்திலோ, EMAIL  மூலமோ  பகிர்ந்து கொள்ள இயலவில்லை . 

இன்று மட்டுமே 9 செய்திகள்  இந்த வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளன. இன்னமும் முக்கிய  செய்திகள் பகிரப்பட வேண்டி உள்ளன. அதிகப் படியான செய்திகள் இருந்தாலும் அவை சரியாக பார்வைக்கு சென்று சேர்வதில்லை. 

எனவே புத்தாண்டுக்கு மறுநாள் அந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று   கூறி அனைவருக்கும் எங்கள்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  

வரும் 2016 ஆம் ஆண்டு  அனைவருக்கும்  இனிதாக  அமையட்டும்! ஏற்றங்களைக் கொடுக்கட்டும்! ஏமாற்றங்கள் தூக்கி  எறியப்படட்டும் ! வெற்றிகளை நோக்கி  நாம் முன்னேறுவோம் !  

வாழ்த்துக்களுடன் ==
 


No comments:

Post a Comment