இதுதான் அரசு இயந்திரம் !
B .O . க்களில் வேலை இல்லை . அங்கே எதற்கு MC பணிக்கென்று தனியே ஒரு ஆள் ? அங்கே எதற்கு MD பணிக்கென்று ஒரு ஆள் ? எல்லா பதவிகளையும் ஒழி . BPM தலையிலேயே கட்டு ! அவனே எல்லா வேலைகளையும் செய்யட்டும் ! ..... இப்படி உத்திரவிட்டார்கள் ஒரு நாள் .
BPM கள் தடையின்றி COUNTER பணிகள் செய்யவேண்டும் ! அதனால் B.O. க்களில் MD மற்றும் MC பணியாற்ற உடனே அதற்கென்று தனியே ஆட்களை போடு ! ஆட்கள் REDEPLOYMENT இல் போட இயல வில்லையெனில் 'POST WHICH WERE KEPT IN ABEYANCE' ஐ பயன்படுத்தி MD/MC பதவிகளை நிரப்பு !.. இப்படி உத்திரவு இடுகிறார்கள் வேறு ஒரு நாள் !
அய்யா ! இதைத்தானே காலம் காலமாக நாங்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம் ! அப்போதெல்லாம் உங்கள் காதில் விழவில்லையே ! இப்போது ஏதோ 'ஒபாமாவிடம்' சென்று கேட்டு வந்து செய்வது போல செய்கிறீர்களே ! இந்த சின்ன விஷயம் புரிய உங்களுக்கு இத்தனை காலமா ?
இப்படித்தான் SPM /APM போன்ற INDOOR STAFF களுக்கு BUSINESS TARGET FIX செய்யாதீர்கள் . அதற்கென தனியே ஆட்களை நியமியுங்கள் என்று சொல்கிறோம் நாம். ஆனால் இது நிர்வாகத்தின் காதுகளில் விழவே இல்லை ! இனி 'ஒபாமாவிடம்' சென்று தெரிந்துகொண்டு வந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து .... ஆமாம் ! INDOOR STAFF ஆல் BUSINESS CANVASS செய்ய இயலாது ! அதற்கு மாற்று ஏற்பாடு செய்கிறோம் என்று சொல்வார்கள் ! அதற்குள் பாதி பேர் 'PUNCTURE' ஆகி இருப்பார்கள் !
இதுதான் அரசு இயந்திரம் !
எப்படியோ நம்ம GDS ஊழியர் இப்பவாவது பிழைத்தால் சரிதான் !
கீழே பார்க்க உத்திரவின் நகலை !