This is the first time since Independence that trade unions, cutting across ideological and political affiliations, have joined hands to register their protest on a wide range of issues arising out of the liberalisation policy.

“The liberalisation and new economic policies unveiled since 1991 have undermined the interests of workers to such an extent that trade unions representing the Left, Right and Centrist parties have been forced to come together. Such unity was not witnessed even during or after Emergency,” All India Trade Union Congress general secretary Gurudas Dasgupta told The Hindu .

Workers of all 11 recognised unions (to be recognised, a union has to have four lakh members) and 5,000 un-affiliated unions will strike work, affecting banking, postal, port and government operations. The unions have come together on a five-point charter, which seeks strict enforcement of all basic labour laws without any exception or exemption and stringent punitive measures for violation; a universal social security cover for unorganised sector workers without any restriction and creation of a National Social Security Fund.

According to the convener of the coordinating committee of the unions and president of the Congress-affiliated INTUC, G. Sanjeeva Reddy, and CITU general secretary Tapan Sen, things have come to such a pass in some States that even registration of new trade unions is not being allowed.
...................................................................
...................................................................

எட்டு  மணி வேலை கேட்டு ... உழைப்பவர்க்கு  உரிமை  கேட்டு
சிகாகோ வின் வீதியிலே   ரத்தம் சிந்திய தோழர்கள் அன்று !
ஈரெட்டு மணி நேரம் ஆனாலும்  ப ணி முடித்து 
இல்லம் திரும்ப முடியாத தோழர்கள் இன்று !

தொழிலாளர் நலச் சட்டங்கள் கூட  தொலைந்து இங்கே  போனது ! 
தொழிற் சாலைகள் எல்லாம் தனியாருக்கும் அந்நியருக்கும்  
சொந்தம் என   ஆனது !  -  அஞ்சலிலும் 'MCKENSEY' புகுந்தது !
சொந்தத் தபால் கூட - 'அஞ்சலில் தாமதம்'  என்று  கூரியருக்கு போனது ! 

ஆதர வற்றோருக்கும், முதியோருக்கும் ஓய்வூதியம் - அரசின் கடமை
அரசுக்கு உழைத்தோருக்கு ஓய்வூதியம்  - சமுதாயக் கடமை
இன்றோ - அரசு ஊழியரின்  பென்ஷன்  பங்குப்  பணம் கூட  
அன்னியரின்  சூதுச சந்தையிலே  -  நம் சிந்தையிலே  இது வருமா  ?

போர்க்குணமாய் தொழிலாளி எழுகிறான் - தேசமெங்கும்
போர் முரசு அறைகிறான் - காங்கிரசு, BJP, கம்யூனிஸ்ட், தி.மு.க என
பேதமின்றி  ஓரணியில் சேர்கிறான் - பிப்ரவரி 28  இல்
நாடெங்கும் வேலை நிறுத்த களம் நோக்கி செல்கிறான் !

என் அஞ்சல் தோழா !   மேலே  பார் !   அருகே  பார் ! 
உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று நீ பார் !
அகலக் கண் விழி ! இல்லையேல்  உன் விழி மூடப் படும் !
உனக்கும்  ஒரு பாட்டு .... உன் உள்ளம் தெளிய ஒரு பாட்டு ......

இதோ ......  ஈழத்து கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை .....

கொம்பிருப்பதை மறந்தும்  வண்டி இழுக்கும் மாடுகளாய்
குவித்த செந்நெல் விளைத்த கரங்கள் தமதென்று அறிந்திருந்தும்
கும்பிட்டுக் கூழைகளாய் - விதி வழி   இது வென்று
மதிகேடாய் - நடைப் பிணமாய் - எத்தனை நாள் என் தோழா ?

வந்த வழி  திரும்பிப்  பார் -   கண்ட களம் தெரியும்  பார்
கொண்ட   வெற்றி  புரியும்  பார் - சிங்கமென சிலிர்த்து எழு -  உன்
துன்ப விலங்குகள் தூளாகும் - முட்டித் திற கதவுகளை
வெற்றி உந்தன் முழந்தாளில்  !

வேலை நிறுத்த களம் நோக்கி -  வீணர்களை விலக்கி
விரைந்து நீ வா  !   விரைந்து நீ வா !

...... J.R.   மாநிலச் செயலர் .