LGO தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. இன்று மாலையோ அல்லது நாளை காலையோ தமிழ் நாடு அஞ்சல் வலைத்தளத்தில்(TAMILNADU POST) நேரிடையாக வெளியிட நாம் கேட்டுக்கொண்டுள்ளோம். ஏனெனில் கடந்த ஒரு வாரமாக தேர்வு முடிவு வெளியிடப் பட்டதாகவும் சில நபர்கள் தேர்வு பெற்றதாகவும் சிலர் தவறான வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். ஆகவே முடிவுகள் பட்டியல் சிலர் முன்கூட்டியே பெறும் பட்சத்தில் பலர் இதனைத் தவறாகப் பயன் படுத்துவார்கள் என்பதால் நமது சங்கத்தின் சார்பாக இப்படி ஒரு கோரிக்கை வைத்துள்ளோம்.
இதுவரை நடைபெற்ற LGO தேர்வுகளில் கிட்டத்தட்ட 60% எழுத்தர் பதவிகள் நிரப்பப் படாமல் காலியாக விடப்பட்டு வந்தது உங்களுக்கு தெரியும். ஏனெனில் தேர்வு வினாத்தாள் பழைய முறையில் கடுமையாக இருந்ததே இதற்கு காரணமாகும்.
தற்போது நமது பொதுச் செயலரின் அயராத முயற்சியால் வினாத்தாள் மாற்றப்பட்டு MCQ முறை கொண்டு வரப்பட்டதால் அனைத்துக் காலியிடங்களும் அநேகமாக நிரப்பப்படும் என்பது உறுதி. P.A. காலியிடங்கள் 191 SA. காலியிடங்கள் 49. ஆக மொத்தம் 240 காலியிடங்களும் நிரப்பப்படும் . இது நமக்கு கிடைத்த வெற்றி .
ஏதாவது கோட்டத்தில் உரிய நபர்கள் தேர்வு பெறவில்லையானால், இதர கோட்டத்தில் தேர்வு பெற்று SURPLUS QUALIFIED ஆக உள்ளவர்கள் மூலம் அனைத்து காலியிடங்களும் உடன் நிரப்பப் படும். SC/ST காலியிடங்கள் உரிய தேர்வு பெற்ற நபர்கள் இல்லையெனினும் RELAXED NORMS அடிப்படையில் அனைத்து காலியிடங்களும் நிரப்பப் படும் என்று உத்திரவாதம் பெற்றுள்ளோம்.
............. மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .