PMG , CCR அவர்களுடன் அஞ்சலகங்களை மூடுவதை எதிர்த்து
இன்று (24.2.2012) நேர் காணல்
ஏற்கனவே CPMG அவர்களுடன் FOUR MONTHLY MEETING இல் பேசியது தொடர்ச்சி யாக,
VELLORE COLLECTORATE, KANCHIPURAM CUTCHERY, PATTUNOOL CHATRAM ஆகிய ஒரு நபர் அஞ்சலகங்களை மூடுவதற்கான உத்திரவை எதிர்த்தும், மக்கள் தேவைக்கு ஏற்ப பல்வேறு
விரிவாக்கப் பகுதிகளில் புதிய அஞ்சலகங்கள் வேண்டியும் நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பில் PMG, CCR இடம் இன்று நேர் காணல் வேண்டினோம். அதன் படி நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J.R. மற்றும் மாநில நிதிச் செயலர் தோழர்.A. வீரமணி ஆகியோர் PMG, CCR அவர்களைச் சந்தித்துப் பேசினர். விளைவாக
VELLORE COLLECTORATE PO மூடும் உத்திரவை ரத்து செய்வதாக PMG அவர்கள் உறுதி அளித்தார். அதன் படியே இன்று மாலை அந்த உத்திரவு ரத்து செய்யப்பட்டது.
KANCHIPURAM CUTCHERY, PATTUNOOL CHATRAM PO க்கள் சென்ற ஆண்டிலேயே உரிய TRANSACTION இல்லாத காரணத்தால் மூடுவதாக முடிவெடுத்து அதற்கான அறிக்கையும் DIRECTORATE க்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் இதற்கான உத்திரவும் அந்த SP க்கு ஏற்கனவே அளிக்கப்பட்டதாலும் அதனை தன்னால் நிறுத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் உறுதியாக தெரிவித்தார்.
இருந்த போதிலும் RELOCATION மூலமாகவோ அல்லது பெருகி வரும் மக்கள்
தேவைக்கு ஏற்பவோ வேறு இடத்தில் அஞ்சலகம் தேவைப் படின் உடன் செய்து
தருவதாகவும் உறுதி அளித்தார். நாம் இதனை ஏற்கவில்லை. இது குறித்து CPMG இடம்
இன்றே பேசுவதாக கூறினோம்.
இது தவிர CCR REGION இல் ஏற்கனவே பிரச்சினை உள்ள பகுதிகளாகிய திருமுல்லைவாயில் - நெற்குன்றம் பகுதி , வண்டலூர் - மேலக் கோட்டையூர் பகுதி ஆகிய
இடங்களில் புதிய அஞ்சலகங்கள் , ஏற்கனவே மூடப் பட்ட அலுவலகங்களுக்காக Relocation அடிப்படையில் திறந்திட வேண்டினோம். இதற்கான உரிய PROPOSAL அளிக்கப் பட்டால்
நிச்சயம் இவற்றையும் திறக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
இதன் பிறகு , ஏற்கனவே திருவல்லிக்கேணி அஞ்சலகத்துடன் இணைக்கப் பட்ட TP KOIL S.O. வை மீண்டும் அதே இடத்தில் திறந்திட வேண்டினோம். கட்டிடப் பிரச்சினையால் அது இணைக்கப் பட்டதாகவும் HR & CE மூலம் கோயில் வளாகத்தில் இடம் பார்த்துக் கொடுத்தால் நிச்சயம் அந்த அலுவலகத்தை மீண்டும் திறப்பதாக உறுதி அளித்தார்.
இதன் பின்னர் இறுதியாக உங்களது காலத்தில் இனி CCR மண்டலத்தில் அஞ்சலகம் மூடும் பிரச்சினை எழக் கூடாது என்று வேண்டினோம். அதற்கு அவரும் நிச்சயம் அதற்கான உறுதியை அளிப்பதாகவும் கூறினார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த பேட்டி நடைபெற்றது. பிரச்சினையை முழுமையாகத் தீர்க்கவில்லை எனினும் ஒரு பகுதி தீர்த்து வைத்ததற்கும் நாம் கேட்ட உடனே பிரச்சினையின் அவசரம் அறிந்து உடனே பேட்டி அளித்ததற்கும் ,
நீண்ட நேரம் பிரச்சினைகளை பொறுமையாகக் கேட்டு , விவாதித்து , உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததற்கும் , CCR மண்டலத்தில் இனி அஞ்சலக
மூடும் நடவடிக்கை இருக்காது (Except Relocation) என்று உறுதி அளித்ததற்கும்
PMG CCR அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் சார்பாக நமது நெஞ்சார்ந்த நன்றி.
குறிப்பு :- KANCHIPURAM CUTCHERY , PATTUNOOL CHATRAM PO க்கள் தொடர்பாக
CHIEF PMG அவர்களைப் பார்க்க மாலை அவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு
காத்திருந்தோம். ஆனால் , அந்த நேரத்தில் இந்த அலுவலகங்கள் தொடர்பாக பொது
நல வழக்குகள் நீதி மன்றத்தில் தாக்கல் ஆகியுள்ளதாகவும், KANCHIPURAM CUTCHERY
அலுவலக மூடலை எதிர்த்து தடையாணை தற்போது கிடைத்துள்ளதாகவும் , எனவே
இது குறித்து தற்போது CPMG அவர்கள் உடன் பேச வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்
பட்டதால், மாலை சென்ற பிரதிநிதிகள் வேறு வழியின்றி திரும்பினோம்.
மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள் :
அஞ்சலக மூடலை எதிர்த்து தலமட்டத்தில் இயக்கங்களைக் கட்டிய , பல்வேறு போராட்ட
வடிவங்களை அமைத்த, பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய,
நம் NFPE இயக்கத்தின் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் கோட்டச் சங்கத்தின் முன்னோடிகளுக்கும், வீரம் செறிந்த தோழர்களுக்கும் , குறிப்பாக அதன் கோட்டச்
செயலர்கள் தோழர். A. கேசவன் ,தோழர் . S. வீரன் ஆகியோருக்கு நமது மனமார்ந்த
பாராட்டுக்கள். வீர வாழ்த்துக்கள்.
நாம் ஏற்கனவே அருணகிரி சத்திரம் (ஆரணி) , தேனாம்பேட்டை வெஸ்ட் (Chennai City Central)
அஞ்சலக மூடலை தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த வரிசையில்
இந்த முயற்சி சேருகிறது. தல மட்ட போராட்டங்கள் மட்டுமே ஊழியர் சங்கப் பிரதிநிதிகளின் முயற்சிக்கு வலு சேர்க்கும் - வெற்றியை ஈட்டித் தரும் என்பதே உண்மையாகும். கோட்டச் சங்கங்கள் ஊழியர் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி ,
தல மட்ட இயக்கங்கள் ,போராட்டங்கள் நடத்த நடத்த நம் சங்கம் வலுப்படும். ஊழியர்
உரிமை காக்கப் படும் என்பதே தொழிற் சங்க வரலாறு காட்டும் பாடமாகும்.
வாழ்த்துகளுடன்,
J.R. மாநிலச் செயலர்.

எனினும் KANCHIPURAM ஓரகடம் பகுதியிலும் VELLORE சத்துவாச்சேரி அருகில் அலமேலுமங்கா புரம், ரங்காபுரம் பகுதியில் அஞ்சலகம் வேண்டும் என்று கோட்ட சங்கங்களில் இருந்து கோரிக்கை வந்துள்ளதை உடன் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டினோம்.
அதற்கு அவரும் KANCHIPURAM -MATHUR பகுதியில் RELOCATE செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாகவும், VELLORE சத்துவாச்சேரி பகுதியில் உரிய PROPOSAL அளிக்கப் பட்டால் உடன் பரிசீலிக்கப் படும் என்று உறுதி அளித்தார்.