Wednesday, February 29, 2012

HISTORIC FEB 28TH GENERAL STRIKE - A GRAND SUCCESS

            பிப்ரவரி 28  பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி !           

இந்திய நாட்டின் மிகப் பெரும் தொழிற்  சங்கங்களான

ஆளும் இந்திய தேசிய காங்கிரசின்                                             .......  INTUC
எதிர்க் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின்                       .......  BMS
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்                                                        ....... AITUC
மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியின்                                             ....... CITU
மற்றும் AICCTU, HMS, UTUC,  TUCC, SEWA,  ஆளும் மத்திய அரசில்  அங்கம் வகிக்கும்  
தி. மு. க. வின் LPF உள்ளிட்ட 11  தொழிற் சங்க மையங்கள் அறிவித்த வேலை நிறுத்தம்.

ஆளும் மத்திய அரசின் தொழிலாளர்  விரோத ,  மக்கள்  விரோத  முதலாளித்துவ  கொள்கைகளுக்கு எதிரான  வேலை நிறுத்தம்.  

பங்கு மார்க்கெட்டில் சூதாடும் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து 
வேலை நிறுத்தம் .

தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிக்கப் பட்டு, கால  அளவின்றி
  தொழிலாளர் வேலை   வாங்கப் படுவதை எதிர்த்து வேலைநிறுத்தம். 

அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் 
நாசகார கொள்கையை எதிர்த்து வேலை நிறுத்தம்.
   
இதுவரை இந்திய தொழிற் சங்க வரலாற்றில் இப்படி ஒரு ஒற்றுமை 
தொழிற் சங்கங்களிடையே கண்டதுமில்லை . கேட்டதுமில்லை . 

ஏனெனில் தொழிலாளிக்கு இது வாழ்வா  சாவா  பிரச்சினை.
அதனால் தான் ஆளும் கட்சி தொழிற் சங்கம் கூட இந்த
வேலை நிறுத்த  அறிவிப்பு   வெளியிட்டது.

இதை கம்யூனிஸ்டுகளின் போராட்டம் என்று கதை விட்ட 
"கை நாட்டு" கூட அஞ்சலில் உண்டு. அப்படியானால் INTUC  
கூட   CITU ஆகிவிடுமா ? 

கட்டபொம்மன் பிறந்த மண்ணில் தான் எட்டப்பனும்
பிறந்தான் என்பது வரலாறு. எட்டப்பர்கள் நம்மிடையேயும். 

இதையும் மீறி நம் ஒன்று பட்ட சக்திக்கு மாபெரும் வெற்றி !
தமிழகமெங்கும் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, GDS 
கலந்துகொண்ட வேலை நிறுத்தம் அஞ்சலில்  80%.
RMS  இல் நூற்றுக்கு நூறு  சதம்.

வேலை நிறுத்தம் வெற்றி பெற இரவு பகல் பாராது
பாடுபட்ட போராளிகளுக்கு  மாநிலச் சங்கத்தின் சிரம் 
தாழ்ந்த வீர வணக்கம்!. 
முழு வீச்சில் வெற்றிக் களம் அமைத்த கோட்ட/ கிளைச் 
செயலர்களுக்கு, மாநிலச் சங்க  நிர்வாகிகளுக்கு 
நம் நெஞ்சார்ந்த நன்றி !.     

தொழிலாளிக்கு தொழிற் சங்கம் கேடயம் . 
தொழிற் சங்கத்திற்கு போராட்டம் ஆயுதம் . 
அதிகாரிக்கு அரசாங்கம் கேடயம் . 
அரசாங்கத்திற்கு அடக்குமுறை ஆயுதம்.  

அடக்குமுறை வேரறுப்போம் !
தொழிலாளி உரிமை காப்போம்!

வீர வாழ்த்துக்களுடன் 
J.R. மாநிலச் செயலர்.