05.10.2012 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் தமிழக JCA சார்பில் அளிக்கப்பட வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் நிர்வாகத்தின் சார்பில் திரு . M. நாச்சிமுத்து , AD SR அவர்களும் ஊழியர் தரப்பில் 13 மாநிலச் செயலர்களும் கலந்து கொண்டார்கள்.
நிர்வாகத் தரப்பில் CPMG TN அவர்கள் கலந்துகொள்ளாமல் ASST. DIRECTOR ஒருவரை அனுப்பியது சட்ட விதிகளுக்கு முரணானது என்பதை தொழிலாளர் நல ஆணையர் சுட்டிக் காட்டி எச்சரித்தார் . ஊழியர் தரப்பில் அளிக்கப்பட ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு , அதன் மீதான விபரங்களை பொறுமையாக கேட்டறிந்தார். நாம் வைத்த குற்றச் சாட்டுகளுக்கு நிர்வாகத் தரப்பில் பதில் ஏதும் சரிவர அளித்திட இயலவில்லை .
இதனை சுட்டிக் காட்டி , தொழிலாளர் நல ஆணையர் அவர்கள் , உடனடியாக CPMG TN அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினை தீர்க்கப் படவேண்டும் என்று நிர்வாகத்திற்கு உத்திரவிட்டார் . பேச்சு வார்த்தையின் முடிவுகளை உடன் தமக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார் . அதனடிப்படையில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு தேதி தெரிவிக்கப் படும் என்றும் பதிவு செய்யப் பட்டது
இது சம்பந்தமாக தொழிலாளர் நல ஆணையர் முன் கையொப்பமிடப்பட்ட MINUTES COPY கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கப் பட்டுள்ளது .