Monday, October 29, 2012

MEETING WITH THE CPMG, TN ON STAFF MATTERS

அன்புத் தோழர்களே ! வணக்கம்.!

இன்று நமது CPMG, TN  அவர்களை நேரில் சந்தித்து  சில பிரச்சினைகள் குறித்து NFPE/FNPO  மாநிலச்  செயலர்கள் தோழர். J.R.,  G.P . முத்துகிருஷ்ணன் K  சங்கரன் , P . குமார்   ஆகியோர்  சந்தித்துப் பேசினோம்  அவை விபரம் கீழே :-

1.  12.11.2012 முதல் துவங்கவுள்ள MCDP  பயிற்சி வகுப்பு , தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு  மாற்றியமைக்க கோரினோம்.  அது குறித்து அளித்த கடித நகல் கீழே பார்க்கவும்.  பயிற்சி நாட்களை குறுக்க முடியாததாலும் , TRAINING CLASS க்கு விடுமுறை விட முடியாததாலும் , பயிற்சி தொடங்கும் தேதியை  12 க்கு பதிலாக 14 .11.2012 என மாற்றியமைக்க CPMG  அவர்கள் ஒப்புதல் அளித்தார்கள். 

2 . MACP  வழங்குவது குறித்து   நமது சம்மேளனம் எழுப்பிய  பிரச்சினையில் DOPT  அளித்த விளக்க ஆணை ,  தமிழகத்தில் தவறுதலாக நிர்வாக உத்திரவாக  வெளியிடப்பட்டுள்ளது  என்பதை விளக்கினோம்.  அதாவது 1.9.2008 க்கு முன்னரும்  பதவி உயர்வு வேண்டாம் என்று  மறுத்தவர்களுக்கும் MACP  வழங்கத் தேவையில்லை என்று நமது  மாநிலத்தில் விளக்க ஆணை வெளியிடப் பட்டுள்ளது.  இது  தவறு என்று நாம் சுட்டிக் காட்டினோம். இப்படிச் செய்வதால் ஏற்கனவே MACP  அளிக்கப் பட்ட பல தோழர்களுக்கு RECOVERY  வரும். 

MACP  என்ற திட்டம் நம் இலாக்காவில்  அறிமுகப் படுத்தப் பட்டதே 1.9.2008 முதல் தான் என்பதாலும் , இதற்கு முன்னர் நமது இலாக்காவில் TBOP /BCR  முறையே இருந்தது என்பதாலும் , DOPT  இன் விளக்க ஆணை  1.9.2008 முதல் மட்டுமே  நமது இலாக்காவில் அமலுக்கு வரும் என்றும் , இதற்கு முன்னர் ACP I /ACP II  திட்டம் இருந்த  பகுதிக்கே  இந்த விளக்க  ஆணை   1.9.2008 க்கு முன்னர் நடைமுறைக்கு வரும் என்றும் நாம் சுட்டிக் காட்டினோம். இதனை ஏற்ற நமது CPMG , இது குறித்து  DIRECTORATE க்கு விளக்கம் கேட்டு எழுதுவதாகவும் அது வரை  இதன் மீது எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கப் படாதென்றும்   உறுதியளித்தார்.  இது குறித்து நமது அகில இந்தியச் சங்கத்தின் மேல் நடவடிக்கை  கோரப்பட்டுள்ளது. 

3. நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் LSG  பதவி உயர்வுப் பட்டியல் , மேலும் காலதாமதமின்றி  உடன் வெளியிட வேண்டினோம்.  சில நிர்வாக காரணங்களால்  இது  தாமதப் படுவதாகவும் , உடன்  வெளியிட நடவடிக்கை  மேற்கொள்ளப் படுமென்றும்  CPMG  உறுதியளித்தார். 

4. இது தவிர  சந்தோஷ் கொரியர்  குழு  பரிந்துரைப்படி ACCOUNTANT  களுக்கு வழங்கப்படும்  SPECIAL  ALLOWANCE  என்பது 1.9.2012 முதல் வழங்குவதாக  தமிழகத்தின் பல கோட்டங்களில்  புரிந்து கொள்ளப் பட்டுள்ளது . இது தவறு என்றும் MACP  என்பது பதவி உயர்வு அல்ல என்பதால் , இந்த ALLOWANCE  நிறுத்தப்பட்ட நாள் முதலே  ARREARS  உடன்  வழங்கப் பட வேண்டும் என்பதையும்  சுட்டிக் காட்டி நாம் கடிதம் அளித்துள்ளோம். இந்த  உத்திரவில் 'IMMEDIATE  EFFECT ' என்று போடப்பட்டுள்ளதால் , இந்த உத்திரவு அளிக்கப் பட்ட  தேதியான 30.8.2012/1.9.2012 தேதியில்  இருந்து அமல் படுத்தப் பட  நமது CPMG  அலுவகத்தில் இருந்து உத்திரவு இடப்பட்டுள்ளது.  எனவே இதனை மாற்றிட  இலாக்காவின் விளக்க ஆணையும் கோரப்பட்டுள்ளது .  இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க நமது  அகில இந்திய சங்கத்திற்கு நாம் புகார் அனுப்பியுள்ளோம்.