அன்புத் தோழர்களே ! வணக்கம்!
நாம் நேற்று நமது CPMG அவர்களிடம் 3 OPTIONAL HOLIDAYS இல் 11.10.2013 ஐ 14.10.2013 ஆக மாற்றித் தருமாறு கேட்டுக் கொண்டிருந்தோம் . அந்த கடிதத்தின் நகலும் நமது வலைத் தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
அதே நேரத்தின் நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் மூலம் CGEWCC செயலரிடம் OPTIONAL HOLIDAY ஐ மாற்றித்தர கேட்கப் பட்டிருந்தது. நமது CPMG அவர்களும் அந்த COMMITTEE இடம் ஆலோசனை செய்துள்ளார்.
அந்த COMMITTEE இன் செயலரும் CENTRAL EXISE COMMISSIONER ருமான அதிகாரி தற்போது நமது CONFEDERATION செயலருக்கு கடிதம் அளித்துள்ளார். அதன் நகலை கீழே பிரசுரித்துள்ளோம். பார்க்கவும்.
ஏற்கனவே COMMITTEE கூடி தனது முடிவினை DOPT க்கு தெரிவித் துள்ளதாலும், அப்படி தெரிவிக்கப் பட்டபின்னர் விடுமுறையை மாற்றக் கூடாது என்று 2012 இல் DOPT உத்திரவு அளித்திருப்பதாலும் இந்த விடுமுறையை தற்போது மாற்றிட இயலாது என்பதே அவரின் கடிதத்தின் சாரம் ஆகும். நமது CPMG இடமிருந்து இதுவரை பதில் வரவில்லை.