Tuesday, October 1, 2013

STATE CONVENTION ON INDEFINITE STRIKE AND STATE CONFERENCE OF THE CONFEDERATION

அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம் !

ஏற்கனவே அஞ்சல் RMS தமிழ் மாநில இணைப்புக் குழு சுற்றறிக்கை எண் 1 இல் அறிவித்த படி  

7 ஆவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைத்தல்,  50% பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் 01.01.2011  முதல் இணைத்தல், GDS ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய / பணி உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலித்தல்,  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல்  உள்ளிட்ட  15 அம்சக் கோரிக்கைகளுக்கான  வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு மாநாடு  தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் எதிர் வரும் 05.10.2013 சனிக் கிழமை சென்னை , தி. நகர்  ஜெர்மன் அரங்கில் காலை சரியாக  10.00  மணிக்கு துவங்கி மதியம் 01.00 மணிக்கு முடிவடையும். 

அது போல  தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மாநாடு மதியம் உணவு இடைவேளைக்குப் பின்னர்  சரியாக 02.00  மணிக்கு துவங்கி மாலை 05.00  மணிக்கு முடிவடையும். 

இது குறித்த  சுற்றறிக்கையின் நகலை கீழே அளித்துள்ளோம். இந்த சுற்றறிக்கையும்  அதற்கான  போஸ்டரும் ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு , GDS , நிர்வாகப் பிரிவு, SBCO, ACCOUNTS உள்ளிட்ட பகுதிகளுக்கும்  அதன் மாநிலச் செயலர்கள் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.

எனவே இந்த வலைத்தளத்தை பார்க்கும் அனைத்து நிர்வாகிகளும் தவறாது நம்முடைய தோழர்கள் அனைவருக்கும் இதனை தெரிவிக்க வேண்டுகிறோம்.

கண்டிப்பாக அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் , கிளைக்கு தலா 5 நிர்வாகிகளுக்கு குறையாமல் விடுப்பெடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அது போல  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS நான்கு , GDS NFPE, SBCO, ACCOUNTS மற்றும் ADMIN மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறுதல் இன்றி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். 

நமது NFPE சம்மேளனத்தின் மா பொதுச் செயலரே   மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மா பொதுச் செயலருமாக இருப்பதாலும் , அஞ்சல் மூன்றின் பொதுச் செயலராக இருப்பதாலும்,  தோழர். கிருஷ்ணன் அவர்களே கலந்து கொண்டு இதனை நடத்துவதாலும்  

பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில்  நடைபெறும் மகா சம்மேளனத்தின் மா நாடு என்பதாலும்,  

நமது முது பெரும் தலைவர்  தற்போதைய மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் A.G.P. என்றழைக்கப் படும் தோழர் A.G. பசுபதி அவர்கள் இந்த மாநாட்டில் கௌரவிக்கப் பட உள்ளதாலும்  

நிச்சயம் ஒவ்வொரு  நிர்வாகியின் பங்களிப்பும் இதில் கட்டாயம் இருந்திட வேண்டும் என்று வேண்டுகிறோம். அனைத்து அஞ்சல் நான்கு  மற்றும் GDS நிர்வாகிகளிடம் கட்டாயம் இதனை தெரிவித்திடல் நம் அஞ்சல் மூன்று சங்க நிர்வாகிகளின் கடமை ஆகும்.

இந்த மாநாட்டில் அஞ்சல் இயக்கத்தை சேர்ந்த  மேலும் பல்வேறு முது பெரும் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் .  ஆகவே உங்கள் அனைவரையும்  தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பாக மாநிலச் செயலர்கள் அனைவரும்  இரு கரம் நீட்டி வருக வருக என வரவேற்கிறோம்.

உங்கள் வரவை தவறுதல் இன்று எதிர்பார்க்கிறோம்.

வேலை நிறுத்த கருத்தரங்கில் ஒன்று கூடுவீர் !
மாநில மாநாட்டை சிறக்கச் செய்வீர் ! 
போராட்ட வாழ்த்துக்களுடன்

K. ராஜேந்திரன்                                              J. ராமமுர்த்தி
தலைவர்  (RMS நான்கு )                     கன்வீனர் (அஞ்சல் மூன்று)
மாநிலச் செயலர்கள்
V. ராஜேந்திரன், அஞ்சல் நான்கு               K. சங்கரன் ( RMS மூன்று )
A. இரகுபதி உமாசங்கர்  (ADMIN)                       B. சங்கர் ( ACCOUNTS)
S. அப்பன்ராஜ் (SBCO)                         R. தனராஜ் ( AIPEU GDS NFPE)

அஞ்சல்  RMS இணைப்புக் குழு ,  தமிழ் மாநிலம் .