தமிழக AIPEU GDS NFPE சங்கத்தின் முதல் மாநில கவுன்சில் கூட்டம் கடந்த 17.10.2013 அன்று சென்னை எழும்பூர் SRMU சங்கக் கட்டிடத்தின் நக்கீரன் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . அதன் மாநிலத் தலைவர் தோழர் R . ராமராஜ் அவர்கள் தலைமை வகிக்க , சென்னை வட கோட்டத்தைச் சேர்ந்த தோழர். லீலாராமன் (செயலர்) வரவேற்புரை யாற்ற , NFPE சம்மேளனத்தின் உதவி மாபொதுச் செயலர் தோழர். S . ரகுபதி அவர்கள் மிகச் சிறப்பானதொரு துவக்கவுரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து கூட்டத்தின் நோக்கம் , மாநிலச் சங்கத்தின் செயல்பாடுகள், மத்திய சங்க நிகழ்வுகள் , நம்முன்னே உள்ள கடமைகள் , எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய பேரணி உள்ளிட்ட தகவல்களுடன் ஒரு நீண்ட எழுச்சி யுரையினை அதன் மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் வழங்கினார்கள் .
இதர மாநிலச் சங்க நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் தோழர்.R . விஷ்ணுதேவன், பவானி மகாலிங்கம் , பட்டுக்கோட்டை இளங்கோவன், மதுரை ராஜசேகர், சேலம் மேற்கு சண்முகம், தாம்பரம் விஜயகுமார், பாண்டிச்சேரி கலிய முர்த்தி , திருவண்ணாமலை முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டு விவாதத்தை மெருகேற்றினர் . இது தவிர 32 கிளைகளை இருந்து பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநில நிதிச் செயலரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் A . வீரமணி, அஞ்சல் மூன்று அகில இந்திய செயல் தலைவர் தோழர் N .G . , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். V . ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர்.
இது தவிர அஞ்சல் மூன்று அம்பத்தூர் கிளையின் முன்னாள் தலைவர்கள், தோழர் நரசிம்மலு, தோழர் முருகன், திண்டுக்கல் தோழர். மருதை ஆகி யோரும் கலந்து கொண்டனர் .
கூட்டத்தின் தீர்மானங்களில் முக்கியமாக , ஒவ்வொரு கோட்டத்தில் இருந்தும் GDS தோழர்கள் 15 பேருக்கு குறையாமலும் , இதர அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு R 3, R 4 உள்ளிட்ட சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட கிளைச் செயலர்கள் அனைவரும் முழு வீச்சில் எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு ஊழியர்களை திரட்டிட வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது .
இத்தகைய கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை வடகோட் டத்தைச் சேர்ந்த P 3/GDS சங்க நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் நன்றி முழுவதுமாக உரித்தாக்கப் பட்டது .
குறிப்பு :-
1. நமது அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் இந்த பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் விடுதல் இன்று கண்டிப்பாக கலந்து கொண்டிட வேண்டும்.
2. மேலும் அனைத்து அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். இதர முன்னணித் தோழர்களையும் GDS தோழர் களையும் ஒன்றிணைத்து , உடனடியாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்திட வேண்டுகிறோம். இறுதியில் செய்தால் நிச்சயம் டிக்கெட் CONFIRM ஆகாது என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.
3. இதற்கான பொறுப்புகளை அஞ்சல் மூன்று மாநிலச் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு மாநிலச் சங்கத்திற்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். உடன் பதிலை எதிர்பார்க்கிறோம்.