GDS ஊழியர்கள் தபால்காரராக பதவி உயர்வு பெற்றதில் , கேள்வித்தாளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக - குறிப்பாக ANSWER KEY இல் விடைகள் தவறுதலாக குறிக்கப் பட்டதால் , மீண்டும் விடைத்தாள்கள் மறு திருத்தம் செய்யப்பட்டன .
அதன் விளைவாக ஏற்கனவே தேர்வு பெற்று பணிக்கு உத்திரவிடப் பட்டு பணி செய்து கொண்டுள்ள பல தோழிய/ தோழர்கள் தேர்வு பெறவில்லை என்று தற்போது அறிவிக்கப் பட்டு அவர்களை ஏன் பணி இறக்கம் செய்து மீண்டும் GDS ஊழியராக ஆக்கக் கூடாது என்று NOTICE இலாக்காவினால் பல இடங்களில் அளிக்கப் பட்டுள்ளது.
அதனை எதிர்த்து, இது நிர்வாகத்தின் தவறுதானே அன்றி தேர்வு எழுதிய ஊழியரின் தவறு இல்லை என்பதனால் அவர்களை பணி இறக்கம் செய்து அளிக்கப் பட்ட உத்திரவு தடை செய்யப் படவேண்டும் என்று
சேலம் மேற்கு கோட்டத்தில் உள்ள தோழர். R. நாகராஜன் என்ற ஒரு பாதிக்க பட்ட ஊழியர் சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார் .அதில் தடை ஆணையும் பெற்றுள்ளார் . அதன் நகலை கீழே பார்க்கவும்.