மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் 40 ஆண்டு கால பொதுச் செயலரும் ,AUDIT & ACCOUNTS ASSOCIATION இன் நீண்ட கால பொதுச் செயலரும் தலைவரும், NCCP மற்றும் BCPC மத்திய ஓய்வூதியர்கள் சங்கங்களின் பொதுச் செயலரும் , 1960 மற்றும் 1968 மத்திய அரசு ஊழியர் ஊதியக் குழு போராட்டங்களில் கலந்துகொண்டு DISMISS செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவரும், இதுநாள் வரை அனைத்து ஊதியக் குழுக்களிலும் ஊழியர் தரப்பு கோரிக்கைகளை வடிவமைத்தவருமாகிய முதுபெரும் தலைவர் தோழர். S .K வியாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவினை ஒட்டி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக கிளையால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18.2.2016 அன்று சென்னை அக்கௌண்டன்ட் ஜெனரல் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலத் தலைவர் தோழர். J . இராமமூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் தோழர். S . சுந்தரமூர்த்தி ( வருமானவரித்துறை ) அவர்கள் முன்னிலை வகித்தார். சென்னை CIVIL ACCOUNTS ASSOCIATION இன் தலைவர் தோழர். M .P . உதயன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலாளர் தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
NFTE T 3 சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலரும் ASIAN CONTINENT TRADE UNION INTERNATIONAL (PENSIONERS & RETIREES ) அமைப்பின் செயலருமான மூத்த தோழர். D.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இறுதியில் MCCA ஆடிட் பிரிவு தலைவர் தோழர். T. ஆனந்தகுமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியர் சங்கத்தின் தோழர். R . பாலசுப்ர மணியன் அவர்கள், முதுபெரும் தலைவர் தோழர். A .V .V . அவர்கள், வருமானவரித் துறை அலுவலர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் தோழர். M .S . வெங்க டேசன் , POSTAL ACCOUNTS சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர். சந்தோஷ்குமார், மாநிலச் செயலர் தோழர். R .B .சுரேஷ், CENTRAL EXISE அதிகாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் சந்திரமௌலி , சாஸ்திரி பவன் மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் கன்வீனர் தோழர். சாம்ராஜ், ராஜாஜி பவன் மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் கன்வீனர் தோழர். பாலசுந்தரம் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் தோழர்களும் தோழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டு தோழர். S. K VYAS அவர்களின் நினைவினை பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சில கீழே உங்களின் பார்வைக்கு.