தமிழக அரசு மாநிலம் முழுதும் வெள்ளம் பாதித்ததாக அரசாணை வெளியிட்டது. அதன்படி வெள்ள நிவாரணம் வழங்கிட வேண்டி CPMG அவர்களை கேட்டுக் கொண்டோம். அவரும் உடனடியாக உத்திரவு வழங்குவதாக சொல்லி GFR விதி 64 மற்றும் 66 ஐ சுட்டிக் காட்டி SR AO மூலம் உத்திரவு வெளியிட்டார்.
பின்னர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு மட்டும் முன்பணம் வழங்குவதாக தெரிவித்தார். இதில் பாண்டி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களையும் சேர்க்க நாம் வேண்டினோம். பரிசீலிப்பதாக CPMG அவர்கள் கூறினார்.
பின்னர் அனைத்து மண்டலங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப் பட்டு அதன் அடிப்படையில், நிதி ஒதிக்கீடு தேவை என்று DIRECTIRATE க்கு எழுதியுள்ளதாக தெரிவித்தார். இது வெறும் ADVANCE என்பதால் நிதி ஒதுக்கீடு தேவையில்லை என்று நாம் கூறினோம்.
இருந்தபோதும் பிரச்சினை DTEக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இரண்டரை மாதங்கள் கடந்தபின் அங்கிருந்து பதிலும் வந்தது. மீண்டும் குழப்பம். தற்போது கோடை வந்துவிட்டது. வறட்சி நிவாரண நிதி கேட்டு மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது .
இந்த சூழலில் நமது மாநில நிர்வாகம் வெள்ள முன்பணம் வழங்கிட மாநிலம் முழுதும் உள்ள அனைத்து PMGக்களுக்கும் ஒரே மாதிரியான உத்திரவை வெளியிட்டுள்ளது. அதற்கு நம் மாநிலச் சங்கத்தின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால் ஏற்கனவே வெளியிட்ட உத்தரவையே மீண்டும் புதிதாக வெளியிட்டுள்ளது. அதாவது மீண்டும் GFR விதிகளை முன்னிறுத்தியே இந்த உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை என்பதே நமது கருத்து. இது கீழ் நிலையில் உள்ள பல அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்திட வேண்டி மாநில நிர்வாகத்திற்கு வேண்டு கோள் வைக்கிறோம்.

எனவே , மாநில அலுவலகத்தில் வழங்கப்பட்டது போல விண்ணப்பித்த எல்லா ஊழியர்களுக்கும் எந்தவித RESTRICTION ம் செயல்படுத்தப்படாமல் முன்பணம் வழங்கிட மாநில நிர்வாகத்தை வேண்டுகிறோம். உத் திரவின் நகல் கீழே பார்க்கவும்.