கடந்த 19.2.2016 அன்று NJCA சார்பில் EMPOWERED COMMITTEE யுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் வேண்டி மத்திய அரசு ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தியும், 10 நாட்களாக போலீஸ்
அடக்கு முறையையும் மீறி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்திய வீரம் செறிந்த வேலை
நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த 19.2.2016 அன்று உணவு இடைவேளையில் சென்னை அண்ணா சாலை CPMG அலுவலக
வளாகத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஒரு மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் மகா சம்மேளனத்தின் உறுப்பு சங்கங்கள் மற்றும் அனைத்திந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ்.
ஓய்வூதியர் சங்கம், அனைத்திந்திய BSNL
DOT ஓய்வூதியர் சங்கம் ஆகிய அமைப்புக்கள் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தன.
ஆர்ப்பாட்டத்திற்கு மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலத் தலைவர் தோழர். J ராமமூர்த்தி அவர்கள் தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.
அனைத்திந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ் மாநில மற்றும் அனைத்திந்திய பொதுச் செயலாளர் தோழர். K. ராகவேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக மகாசம்மேளன தமிழக பொதுச்செயலாளர் தோழர். M. துரைப் பாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அஞ்சல் RMS இனிப்புக் குழு கன்வீனர் தோழர். G . கண்ணன் அவர்கள் நன்றியுரை அளித்தார்.
இதே நாளில் தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரில் விதி எண் 110 இன் கீழ் போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார். அதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை கீழே காணலாம் .