=============================================
sorry for the typographical error
sorry for the typographical error
கீழே தெரிவித்துள்ள செய்தியில் NFPE GDS கருத்தரங்கு நிகழ்வு
எதிர்வரும் 28.2.2016 என்பதற்கு பதிலாக 28.3.2016 என்று தவறுதலாக
வெளியிடப்பட்டது தற்போது திருத்தப் பட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.
====================================================================
தலைநகர மற்றும் மாநில ====================================================================
அளவிலான செய்திகள்
கடந்த 12.02.2016 அன்று புது டெல்லியில் நடைபெற்ற மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கி யமான முடிவுகள் குறித்த மகா சம்மேளனத்தின் பொதுச் செயலரின் சுற்றறிக்கையை கீழே இணைப்பில் காணவும்.
இதன்படி முக்கியமாக
1. 11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்
அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் .
2. 11.3.2016 அன்று புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மிகப் பெரிய மத்திய
அரசு ஊழியர் பேரணி நடத்துதல்.
3. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மாநிலத் தலை
நகரங்களிலும் மிகப் பெரும் ஊழியர் பேரணி நடத்துதல். இதில் NJCA
அகில இந்திய தலைவர்களை கலந்து கொள்ளச் செய்தல்.
4. 29.3.2016 அன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் "SOLIDARITY DAY "
கடைபிடித்தல் .
5. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அனைத்து நிர்வாகிகள்/
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள்
அடங்கிய கூட்டம் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் ஏற்பாடு
செய்தல் . அதில் மகா சம்மேளனத்தின் அகில இந்திய நிர்வாகிகள்
கலந்துகொண்டு வேலை நிறுத்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தல்.
இது தமிழகத்தில் 25.3.2016 அன்று நடைபெறும். இதில் தோழர்கள் . M .
கிருஷ்ணன், மணி ஆச்சாரி, துரைபாண்டியன், வெங்கடசுப்ரமணியன்
ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
6. NJCA தலைவர்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சி
தலைமை மற்றும் பாராளுமன்ற / ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு
மத்திய அரசு ஊழியர் கோரிக்கைகளை தீர்த்து வைத்திட உடன்
தலையிடுமாறு கடிதம் அனுப்பவேண்டும்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்
அகில இந்திய மாநாடு மற்றும் மாநில மாநாடு
1. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு
எதிர்வரும் ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 தேதிகளில் தமிழகத்தில்
நடைபெறும். (இதற்கு முன்னதாக மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில
மாநாடும் நடைபெற உள்ளது )
2. இந்த மாநாட்டை ஒட்டி , 27.8.2016 அன்று அரை நாள் , அகில இந்திய
அளவிலான மகளிர் கருத்தரங்கம் இதே மாநாட்டு நிகழ்வில் நடைபெற
உள்ளது.
3. அகில இந்திய மாநாட்டு சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம்
ரூ. 1000/- . மகளிர் கருத்தரங்கில் மட்டும் கலந்து கொள்பவர்களுக்கு
சார்பாளர் கட்டணம் ரூ. 400/-.
4. ஜூன் மாதத்தின் முதல் பகுதியில் மகா சம்மேளனத்தின் தொழிற்சங்க
பயிற்சி முகாம் உத்திரகண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியில்
நடைபெற உள்ளது.
கடந்த 8.2.2016 அன்று புது டெல்லியில் நடைபெற்ற NJCA கூட்டத்தின்
முடிவுகள் அடங்கிய சுற்றறிக்கை மற்றும் கோரிக்கை மனு கீழே உள்ள இணைப்பில் காணவும் .
இதன்படி முக்கியமாக
1. 11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்
அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் . ஆர்ப்பாட்டம் நடத்துதல்.
2. 11.3.2016 அன்று புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மிகப் பெரிய மத்திய
அரசு ஊழியர் பேரணி நடத்துதல். காபினெட் செயலரிடம் வேலை
நிறுத்த நோட்டீஸ் NJCA தலைவர்கள் வழங்குதல்.
3. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மாநிலத் தலை
நகரங்களிலும் மிகப் பெரும் ஊழியர் பேரணி நடத்துதல். இதில் NJCA
அகில இந்திய தலைவர்களை கலந்து கொள்ளுதல்.
4. 29.3.2016 அன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் "SOLIDARITY DAY "
கடைபிடித்தல் .
5. காலவரையற்ற வேலை நிறுத்தம் எதிர்வரும் 11.4.2016 காலை 06.00
மணிமுதல் துவக்குதல்.
6. துறைவாரிக் கோரிக்கைகளை பகுதி II ஆக அந்தந்த பகுதி சங்கங்கள்
தங்களது வேலை நிறுத்த நோட்டீஸ் உடன் சேர்த்து வழங்குதல்.
கடந்த 08.02.2016 அன்று புது டெல்லியில் நடைபெற்ற POSTAL JCA (NFPE & FNPO ) கூட்டத்தின் முடிவுகள் ஏற்கனவே நம் வலைத்தளத்தில் பிரசுரித் துள்ளோம். இருப்பினும் அதன் முக்கிய அம்சங்கள் கீழே தமிழில் தரப் படுகின்றன .
1. 11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ்
அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் . ஆர்ப்பாட்டம் நடத்துதல்.
2. அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கோரிக்கைகளை
வலியுறுத்தி எதிர்வரும் 18.3.2016 அன்று முழு நாள் தார்ணா போராட்டம்
நடத்துதல். ( அரை மணி நேர ஆர்ப்பாட்டம் அல்ல ).
3. கோரிக்கைகளை வலியுறுத்தி CPMG அலுவலகம் முன்பாக எதிர்வரும்
06.04.2016 அன்று முழு நாள் தார்ணா போராட்டம் நடத்துதல்.
4. 11.4.2016 காலை 06.00 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
மேற்கொள்ளுதல்.
கோரிக்கைகள் :-
1. ஏழாவது ஊதியக் குழு தொடர்பான NJCA மூலம் சமர்ப்பிக்கப்பட்ட
கோரிக்கைகளை தீர்த்து வை.
2. அனைத்து GDS ஊழியர்களுக்கும் அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கு .
விகிதாசார அடிப்படையில் GDS ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கு.
3. கோரிக்கை மனுவில் அளிக்கப் பட்டபடி அஞ்சல் துறை ஊழியர்
களுக்கென்ற உயர்த்தப் பட்ட ஊதியம் வழங்கு.
4. ஏழாவது ஊதியக் குழு அறிக்கை அமலாவதற்குள் கேடர் சீரமைப்புத்
திட்டத்தை அமலாக்கு.
5. CBS/CIS தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் உடன் தீர்த்து வை.
6. அஞ்சல் , RMS அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து
காலியிடங்களையும் சிறப்பு தேர்வு நடத்தி உடனே நிரப்பு.
7. தகுதியான அனைத்து CASUAL ஊழியர்களையும் நிரந்தரம் செய்.
அவர்களுக்கு வழங்க வேண்டிய 1.1.2006 முதலான நிலுவைத்
தொகையை உடனே வழங்கு.
GDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்
GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் , எதிர்வரும் GDS உறுப்பினர் சரி பார்ப்பில் அனைத்து GDS ஊழியர்களையும் NFPE GDS சங்கத்தில் இணைத்திட வேண்டியும் , எதிர்வரும் 28.2.2016 அன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள SRMU சங்கக் கட்டிடத்தில் தமிழகம் தழுவிய அளவிலான ஒரு மாபெரும் GDS ஊழியர் கருத்தரங்கம் தமிழ் மாநில GDS சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து NFPE மாநிலச் சங்கங்களின் செயலர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக தோழர்கள் . M . கிருஷ்ணன், R .N . பராசர் , P . பாண்டுரங்கராவ் , K . ராகவேந்திரன், K .V . ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்க உரை நிகழ்த்த உள்ளார்கள். இது குறித்த அறிவிப்பு மாநில GDS சங்கத்தினால் தனியே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தோழர்கள் / தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
J . இராமமூர்த்தி,
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்.