NATURAL CALAMITY ADVANCE
வெள்ள முன்பணம் வழங்கிட இன்று சென்னை பெருநகர மண்டலத்தில் உத்திரவு வழங்கப்பட்டது. அதன் நகல் கீழே காண்க .
இன்று நடைபெற்ற CMC கூட்டத்தில் நமது CPMG அவர்கள் , அனைத்து மண்டல PMG க்களுக்கும் அவரது உத்திரவை அமல்படுத்திடுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படை யில்
சென்னை பெருநகர மண்டலத்தில்
1. சென்னை மாநகரம் / மாவட்டம்
2. காஞ்சிபுரம் மாவட்டம்
3. திருவள்ளூர் மாவட்டம்
4. விழுப்புரம் பகுதி
5. பாண்டிச்சேரி U /T
ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....
மத்திய மண்டலத்தில்
1. கடலூர் மாவட்டம்
2. நாகை மாவட்டம்
ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....
தென் மண்டலத்தில்
1. கன்னியாகுமரி மாவட்டம்
2. தூத்துக்குடி மாவட்டம்
3. திருநெல்வேலி மாவட்டம்
ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....
முன்பணம் உடனடியாக வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்.
இதர பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு உரிய விசாரணை செய்து அதன் அடிப்படையில் வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
======================================================================
தேனாம்பேட்டை ஊழியர் குடியிருப்பு
தண்ணீர் பிரச்சினை
இன்று காலை முதல் VIDEO CONFERENCE , அஞ்சல் வாரிய உறுப்பினர் வருகை , அனைத்து PMGக்கள் வருகை புரிந்த CMC கூட்டம் என்று தொடர்ச்சியாக மாநில அதிகாரிகள் இருந்தபோதிலும் , நமது மாநிலச் சங்கத்தின் மூலம் தேனாம்பேட்டை ஊழியர் குடியிருப்பு தண்ணீர் பிரச்சினை குறித்து கடிதம் அளித்து கீழ் மட்ட அதிகாரிகளிடம் பேசினோம்.
மேலும் CHIEF PMG மற்றும் PMG CCR அவர்களையும் தொடர்பு கொண்டோம். இதன் மீது உடன் நடவடிக்கை எடுத்திட SSP மத்திய கோட்டத்தை அறிவுறுத்தியது மல்லாமல் உடனடியாக குடிதண்ணீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீர் வழங்கிட இரண்டு MOTOR கள் வாடகை அடிப்படையில் பெற்று பொருத்திடுமாறு உடன் உத்திரவு அளித்துள்ளதாக நம்மிடம் இரு அதிகாரிகளும் தெரிவித்துள்ளார்கள்.
எனவே SSP சென்னை மத்திய கோட்டம் அவர்கள் இனியும் தனது பொறுப்பை தட்டிக் கழித்திடாமல் (உடனடி தண்ணீர் வழங்கிட வாடகை MOTOR ஏற்பாடு செய்வதுகூட CHIEF PMG வேலை என்று கருதாமல்) உடனடியாக நடவடிக்கை எடுத்து, நாளையேனும் பாதிக்கப்பட்ட ஊழியர் குடும்பங்களுக்கு தண்ணீர் வழங்கிட வேண்டுகிறோம்.
காலிக் குடங்களுடன் சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடக் கிளம்பிய தாய்க் குலங்களை CPMG மற்றும் PMG CCR மீது நம்பிக்கை வைத்து பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதி கூறி நமது சங்கம்தான் தடுத்து நிறுத்தியுள்ளது என்பதை சென்னை மத்திய கோட்ட நிர்வாகி உணரவேண்டும் என்பதையும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுத்திட உத்திரவிட்ட CPMG,TN மற்றும் PMG CCR ஆகியோருக்கு நம் நன்றி !