பொங்கி எழுவோம் ! போராட்ட களம் நோக்கி !
ஏற்கனவே நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தால் அளிக்கப்பட்ட பிரச்சினைக்கு RJCM MEETING இல் அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படை யிலும் நம்முடைய தொடர் போராட்டத்தின் விளைவாகவும் தற்போது CPMG TN அவர்கள் தமிழகத்தின் அனைத்து 'C' மற்றும் 'B ' CLASS அலுவலகங்களுக்கு BANDWIDTH அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டதாக பதில் அளித்துள்ளார்கள் .
இது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும் . ஏற்கனவே B .O . TRANSACTIONS மதியம் 3.30 மணிக்கு மேல் BO BAG வரப்பெறின் , B .O . TRANSACTIONS அடுத்த நாள் கொண்டுவரலாம் என்று உத்திரவு பெறப்பட்டுள்ளது.
இதுவும் நமது போராட்ட வீச்சுக்குக் கிடைத்த வெற்றியாகும். இதர கோரிக்கைகளிலும் வெற்றி பெற நாம் ஒன்று படுவோம். எதிர்வரும் 17.6.2016 அன்று CPMG அலுவலகம் முன்பாக நடைபெற உள்ள முழு நாள் தார்ணா போராட்டத்தில் பெருமளவில் நாம் பங்கேற்போம்.
பிரச்சினையை சொல்வதற்கு மட்டுமல்ல, பிரச்சினைகளின் மீது விமரிசிப்பது மட்டுமல்ல, பிரச்சினைகளின் தீர்வுக்கான போராட்டங்க ளிலும் நம் முழுமையான பங்களிப்பு அவசியமே. அது முதற்கட்ட ஆர்ப்பட்டமானாலும் சரி , இரண்டாவது கட்ட தார்வாணாயிருந்தாலும் சரி -அலைகடலென உங்களின் பங்கேற்பை அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் எதிர்பார்க்கிறது. CPMG அலுவலக வளாகம் நிரம்பட்டும்.
நம் ஒவ்வொருவரின் உணர்வும் மாநில மற்றும் மத்திய நிர்வாகத்திற்கு தெரியட்டும். இன்னமும் TARGET மட்டுமே நிர்ணயம் செய்யும் 'நீரோ' மன்னர்களாக, VIDEO CONFERENCING இல் மட்டுமே கனவு காணும் கற்பனை வீரர்களாக அவர்களது வட்டம் இருக்கக் கூடாது என்பதை அவர்கள் உணரட்டும்.
உண்மைகளை தெரிந்துகொள்வதும் உதவிக்கரம் நீட்டுவதும் இலாக்காவின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்பதை இனியாவது அஞ்சல் நிர்வாகம் உணரட்டும். விதி 16 மட்டுமே இலாக்கா வகுத்ததல்ல என்று அவர்கள் மனசாட்சி உணரட்டும். INFOSYS க்கு நம் இலாக்கா அடிமை அல்ல என்பதை நம் மூலமாவது அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.
பொங்கி எழுவோம் ! புறப்படுங்கள் போராட்ட களம் நோக்கி !
RJCM Subject
No.5:-
Request for settlement of CBS/CIS
connected problems immediately. There is poor bandwidth connectivity and the
capacity of systems are very low and
they could not even to cope up with the capacity so as to install Windows 7 and Symantec Antivirus in many areas. Widows 7
loaded in many offices are reportedly pirated. There is non uploading of 100%
premium collections of PLI/RPLI into NIC data, which resulted in enormous
public complaints after migration to Mc Camish.
Reply:-
Directorate has supplied 893 computers to
our Circle and region wise allotment will be made. Bandwidth up gradation for D &E offices
is already approved. For other offices it will be examined on merit only.
(Item Closed)