Wednesday, September 28, 2016

NATIONAL POSTAL JCA DECIDED FOUR PHASED PROGRAMME OF ACTION ON GDS BONUS DEMANDS AND CASUAL LABOURER DEMANDS

நான்கு கட்ட போராட்டம்  -  
இரண்டு நாட்கள்  வேலை நிறுத்தம் 

தேசிய அளவிலான POSTAL JCA ( NFPE /FNPO) முடிவின்படி  GDS ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட போனஸ் வழங்கிட வேண்டியும் கேசுவல் ஊழியர்களுக்கு தரவேண்டிய உயர்த்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டியும்  இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட நான்கு கட்ட போராட்டம்  இன்று அறிவிக்கப் பட்டுள்ளது .

தமிழகத்தில் NFPE  கேசுவல்  ஊழியர்களின்  தென் மண்டல மாநாட்டில்   ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படியும் , ஏற்கனவே   தமிழ்  மாநில NFPE அஞ்சல்  RMS இணைப்புக் குழுவில்  எடுக்கப்பட்டு  சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்ட  முடிவின் படியும் , முதல் இரண்டு நிலை  போராட்டங்கள்  தமிழகத்தில் 

எதிர்வரும் 29.9.2016 அன்று  கோட்ட /கிளைகளில் 
கருப்பு சின்னம் அணிந்து  கண்டன  ஆர்ப்பாட்டம்  

எதிர்வரும் 05.10.2016 அன்று  மாநிலத் தலைமையகமான
CPMG  அலுவலக வாயிலில் 
முழு நாள் தர்ணா  போராட்டம்  

என இரண்டு கட்டமாக NFPE  ன்  அனைத்து  உறுப்பு சங்கங்களாலும் நடத்தப்படும். இதர போராட்டங்கள்  POSTAL JCA  அறிவித்தபடி  நடைபெறும். எனவே  இதில் எந்த ஒரு கோட்ட  / கிளை செயலர்களுக்கும் குழப்பம்  வேண்டாம்  என்று கேட்டுக் கொள்கிறோம். போராட்டங்களை எந்த ஒரு கிளைகளிலும் விடுதல் இன்றி சிறப்பாக நடத்திட  கேட்டுக் கொள்கிறோம்.  நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக   செய்தி  மற்றும் காட்சி  ஊடகங்களுக்கு  தகவல் தெரிவித்திட  வேண்டுகிறோம். மேலும் இந்த நிகழ்வில் எடுக்கப்படும் புகைப்படங்களை  EMAIL  மூலம் தாமதமின்றி  மாநிலச்  சங்கத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம். இந்த செய்தியை பார்க்கின்ற தோழர்கள்  தயவு செய்து இந்த செய்தி தெரியாத  இதர தோழர்களுக்கும்  தெரிவித்திட வேண்டுகிறோம். போராட்டம் வெற்றிகரமாக நடந்திட அனைத்து ஆயத்தப்பணிகளையும் செய்திட வேண்டுகிறோம்.

இரண்டரை லட்சம் GDS ஊழியர்களின்  உரிமை காக்க  போராடுவோம் !
ஒரு லட்சம் கேசுவல் ஊழியர்களின் உரிமைக்காக  போராடுவோம் !
உழைக்கும்  வர்க்கம்  ஓரணியில்  திரளட்டும் ! 
ஊழியர்களின் உரிமை ஓங்கி ஒலிக்கட்டும் !