அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
நம்முடைய NFPE பேரியக்கத்தின் உறுப்புச் சங்கமாக புதிதாகத் தோன்றிய AIPEU GDS (NFPE ) சங்கத்தின் முதலாம் அகில இந்திய மாநாட்டை நமது தமிழகத்தில், NFPE இயக்கமே ஒன்று சேர்ந்து எதிர்வரும் மார்ச் 21 மற்றும் 22 தேதிகளில் சென்னை புரசைவாக்கம் தர்மப்ரகாஷ் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடத்த இருப்பது குறித்து ஏற்கனவே சுற்றறிக்கைகள் வாயிலாகவும் வலைத்தளத்தின் வாயிலாகவும் அறிவித்திருந்தோம்.
இன்னும் 19 நாட்களே உள்ள சூழ்நிலையில் , நமது அகில இந்திய மாநாட்டுக்கு நீங்கள் எதிர்வரும் மார்ச் 8 முதல் செல்ல உள்ள சூழ்நிலையில் , நம்முடைய பங்களிப்பு என்பது குறைவாகவே உள்ளது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது .
இதுவரை வரவேற்புக் குழு பொதுச் செயலரிடம் வந்து சேர்ந்த நன்கொடைத் தொகை மிகக் குறைவே. எனவே பம்பரமாக இன்று முதலே செயல் பட்டு , அஞ்சல் நான்கு மற்றும் GDS தோழர்களுடன் இணைந்து களப்பணி ஆற்றிட வேண்டுகிறோம்.
எதிர் வரும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் உங்கள் பகுதி நன்கொடை வசூலை விரைவு படுத்தி முதல் கட்ட தொகையை வரவேற்புக் குழு பொதுச் செயலர் தோழர். K .R . அவர்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.
GDS மாநிலச் சங்க நிர்வாகிகள் மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள் . அதற்கான சுற்றறிக்கை GDS மாநிலச் சங்கத்தின் மூலம் உங்களுக்குக்கு அனுப்பப் பட உள்ளது. விரைந்து செயலாற்றுவீர் !
குறிப்பு :- AIPEU GDS (NFPE ) தமிழ் மாநில சங்கத்தின் வலைத்தளத்தை நீங்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டுகிறோம். நமது வலைத் தளத்தில் அதன் இணைப்பு இடது புறம் கொடுக்கப் பட்டுள்ளது.
அதன் முகவரியும் கீழே தருகிறோம் :-
www.aipeugdstn.blogspot.in. பார்த்த பின் உங்கள் கருத்துக்களை உடன் பதிவு செய்யவும்.