CHENNAI FOREIGN POST இன் அங்கமான CHENNAI AIR COMPLEX பகுதியில் தீடீரென்று காலை 06.00 முதல் இரவு 09.00 வரை SHIFT SYSTEM அறிமுகப் படுத்தப் பட்டு உத்திரவிடப்பட்டது. இதுவரை இந்தியா முழுதும் எந்தவொரு FOREIGN POST அலுவலகத்திலும் இப்படி நடைமுறையில் இல்லை . ஒவ்வொரு மணிக்கும் ஆங்காங்கே தபால் பெறப் பட்டு உடனடியாக அயல் நாட்டு அஞ்சல் பிரித்து அனுப்பப் படும் என்று அதன் இயக்குனர் உத்திரவிட்டார்.
ஆனால் CUSTOMS பகுதியில் எந்த ஒரு தபால் அளிக்கப் பட்டாலும் 48 மணி நேர COOLING PERIOD க்கு பிறகே அது CHECK செய்யப்பட்டு அனுப்பப் படும் என்று விதி இருக்கும் போது உடனுக்கு உடன் தபால் கையாளப் பட எந்தவித தேவையும் இல்லை .
இந்தப் பிரச்சினை வெடித்தபோது உடன் இது குறித்து CPMG , TN அவர்களிடம் NFPE மற்றும் FNPO மாநிலச் செயலர்கள் சென்று விவாதித்து கடிதம் அளித்தோம். CHENNAI FOREIGN POST இன் NFPE மற்றும் FNPO கிளைச் செயலர்கள் தோழர். D .ராய் , மற்றும் தோழர் ஆறுமுகம் ஆகியோர் உடன் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
பிரச்சினையின் தன்மையை முழுதும் புரிந்துகொண்ட CPMG அவர்கள் இந்த உடனே இந்த உத்திரவு நிறுத்தப் படும் என்று உறுதி அளித்தார்கள் . அடுத்த வாரத்தில் தானே நேரிடையாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு FOREGN POST அலுவலகம் சென்று கிளைச் செயலர்கள் மற்றும் ஊழியர்களுடன் நேரிடையாக கலந்துரையாடி கருத்துக்கள் அறிந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப் படும் என்று அறிவித்தார்கள் .
FOREIGN POST இயக்குனரின் தினப்படியான குளறுபடியான உத்திரவுகளால் தொழில் அமைதி கெடுவதை நாம் சுட்டிக் காட்டினோம். அதற்கு ஆவன நடவடிக்கை எடுப்பதாக CPMG அவர்கள் உறுதி அளித்தார்கள். நாம் அளித்த கடிதத்தின் நகலை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம்.