Friday, March 29, 2013

COM.C.P. THILAGENDIRAN, ASST.FIN.SEC., TN CIRCLE UNION PASSED AWAY

"THE LIFE OF THE DEAD IS PLACED IN THE MEMORY OF THE LIVING."
                                                 = MARCUS TULIUS CICERO -ROMAN WRITER


நம் அன்புத் தோழர் , தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மாநில உதவி நிதிச் செயலர்  
தோழர் . C .P . திலகேந்திரன் அவர்கள்  
மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக  இரண்டு மாதங்களாய்  நினைவு தவறி இருந்தார். இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப் பட்டும் பலனின்றி  இன்று அதிகாலை  உயிர் துறந்தார். 

அனைவரிடமும்  இனிமையாகப் பழகக் கூடிய ஒரு சிறந்த பண்பாளர் . 
ஓடிச் சென்று அனைவருக்கும் உதவக்கூடிய  சுறுசுறுப்பான செயல் வீரர். 

தொழிலாளர் பிரச்சினையை தனது சொந்தப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அதைத் தீர்த்து வைப்பதில் அதீத ஈடுபாடு காட்டக் கூடியவர் .பிரச்சினை தீரவில்லையெனில்  அது குறித்து அதிகம்  கவலை கொண்டு இருப்பார்.  இப்படி ஒரு பொது நோக்காளரை  நாம் இழந்து விட்டோம். குறிப்பாக தமிழக அஞ்சல் மூன்று சங்கம்  இழந்து விட்டது.  இது நமது இயக்கத்திற்கே  பேரிழப்பாகும். 

அவரது பிரிவால் வாடும் அவரது துணைவியார், பிள்ளைகள்  மற்றும் குடும்பத்தாருக்கு நம் மாநிலச் சங்கத்தின் ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் .  அவரது ஆன்மா  சாந்தியடைய  நமது இதய பூர்வமான வேண்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் தம் பணி  நம் நினைவில் என்றும்  நீங்காது இடம் பெற்றிருக்கும்.!