Thursday, March 28, 2013

UNITY IS THE ROAD FOR VICTORY !


வெற்றி !  வெற்றி ! வலிமையான போராட்டத்திற்கு வெற்றி ! அடக்கு முறைக்கு எதிரான வெற்றி ! JCA  வின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி !

நம்முடைய  ஒற்றுமையின் காரணமாகவும் , RMS  ஊழியரின் போர்க்குணமிக்க  போராட்ட வடிவின் காரணமாகவும்,  தன்னையே தியாகம் செய்துகொண்டு , ஊழியர்களை களத்தில்  இறக்காமல் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்ட  RMS  பகுதி NFPE /FNPO தொழிற்சங்க தலைமைகளின் சுயநலமில்லா தன்மையின் காரணமாகவும் ,  RMS  பகுதியில்  நடைபெற்ற போராட்டத்தில்  நாம் உண்மையான வெற்றியைப் பெற்றோம் !  இதில் அஞ்சல் பகுதி JCA  வின் முழுப் பங்கினையும் நாம் செலுத்தியுள்ளோம் என்பது, எதிர்கால  ஒன்றுபட்ட போராட்டத்திற்கு ஒரு வித்தாக  அமையும்  என்பதே  நம் நம்பிக்கை !

26.03.2013 அன்று  நாம் அறிவித்த படி  27.03.2013 அன்று  மாநில அஞ்சல் நிர்வாகம் , CHENNAI  SORTING  நிர்வாகத்தை அழைத்துப் பேசி  உடன் பிரச்சினையை தீர்த்திட அறிவுறுத்தியது . அதன்படி  போராடும் தொழிற்சங்கத் தலைவர்கள்  CHENNAI SORTING  நிர்வாகத்தால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். பேச்சு வார்த்தையில் அஞ்சல் JCA தலைவர்கள் தோழர்.JR மற்றும் தோழர்.GPM ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் மீது  அளிக்கப் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்  27.03.2013 மதியம் 03.00 மணி அளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது. எழுத்து பூர்வமாக அளிக்கப் பட்ட ஒப்பந்தத்தின் நகலை கீழே பார்க்கலாம். 

அதன் படி  முறைகேடாக 70 ஊழியர்களுக்கு அளிக்கப் பட்ட DIES  NON  உத்திரவு விலக்கிக்  கொள்ளப்பட்டது . அவர்களுக்கு பிடிக்கப் படுவதாக உத்திரவிடப்பட்ட   இரண்டு நாட்கள் சம்பளம் உடன்  திரும்ப வழங்கிட உத்திரவிடப்பட்டது. மேலும்  புதிய அளவீடு களின் அடிப்படையில் ஊழியர்கள்கொடுமைப்படுத்தப் படும் உத்திரவு  விலக்கிக் கொள்ளப் பட்டது.  இனி ஊழியர்கள் பழைய அளவீடுகளின் அடிப்படையில் பணியாற்றலாம்   என்று அனுமதிக்கப்பட்டது.  இதர பிரச்சினைகள் குறித்து  தொழிற் சங்கங்களுடன் கலந்து முடிவு எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது. உண்ணாவிரதம் இருந்த FNPO மாபொதுச்
செயலர் தோழர். தியாகராஜன், NFPE R3 மாநிலச் செயலர் தோழர். சங்கரன், FNPO R3 மாநிலச் செயலர் தோழர் குமார் உள்ளிட்ட தலைவர்களுக்கு NFPE P 3 மாநிலச் செயலர் தோழர். J.R. மற்றும் FNPO P3 மாநிலச் செயலர் தோழர். G.P. முத்துக் கிருஷ்ணன் ஆகிய இருவரும் பழச் சாறு அளித்து உண்ணா விரதத்தை முடித்து வைத்துபோராட்ட வீரர்களை வாழ்த்தி உரையாற்றினர். FNPO மாபொதுச்செயலர் தோழர். தியாகராஜன் தனது உரையில்அஞ்சல் பகுதி JCA தலைமையின் உடனடியான ஒத்துழைப்பையும் முழு ஈடுபாட்டையும் , பிரச்சினை தீர்வதற்கு மாநில நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண  உதவியதையும் நன்றி தெரிவித்து பாராட்டி பேசினார்.  

இந்தப் பிரச்சினையில் நம்முடைய வாதத்தை ஏற்று உடன்  தீர்த்து வைக்க உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கும் , முழு ஈடுபாட்டுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உண்ணா விரத பந்தலுக்கு வந்து தலைவர்களுடன் உரையாடி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டியும், பின்னர் பிரச்சினை தீர உதவி யவரும் ஆன நமது PMG, CCR திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கும் JCA வின் சார்பில் நமது நெஞ்சார்ந்த நன்றி.

ஒன்று பட்ட ஊழியர் சக்தியின் முன்னே அடக்கு முறைகள் தூளாகும் என்பதற்கு இந்தப் போராட்டம் ஒரு சமீபத்திய உதாரணம் ஆகும். 
ஒன்று படுவோம் தோழர்களே ! வென்றெடுப்போம் தோழர்களே!