Monday, August 19, 2013

3 DAYS BRAVERY STRIKE AT CHENNAI GPO AGAINST SINGLE BATCH DELY SYSTEM

சென்னை GPO  அலுவலகத்தில் கடந்த 14.08.2013 அன்று   SINGLE  BATCH  DELIVERY  அறிமுகப் படுத்த உத்திரவிட்டதை எதிர்த்து  அஞ்சல் நான்கு தோழர்கள்  உடனடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஊழியர்களைத் திரட்டி  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.  இதில் அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ்  கலந்து கொண்டார்.  உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.  மறுநாள் விடுமுறை தினமாதலால், மூன்றாவது   நாளாக   16.08.2013 அன்றும்  வேலை நிறுத்தம் தொடர்ந்தது. 

14.08.2013 மற்றும் 16.08.2013 ஆகிய இரு தினங்களும், PMG, CCR  அவர்களுடன் நடை பெற்ற தொடர்  பேச்சு வார்த்தைகள்   தோல்வியில் முடிந்தன . பேச்சு வார்த்தைகளில்  NFPE  அஞ்சல் மூன்றின் சார்பாகவும் சம்மேளனத்தின் சார்பாகவும்  சம்மேளன உதவிப் பொதுச் செயலர் தோழர். S . ரகுபதி கலந்து கொண்டார். வேலை நிறுத்தம் 17.08.2013 அன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனால் , PMG, CCR  அவர்கள் நேரிடையாக  CHENNAI  GPO  விற்கு வந்து  DELIVERY  HALL  இல் ஊழியர் சங்கப் பிரதிநிதகளுடன் நேரடிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 

பேச்சு வார்த்தையில்  கீழ்க் கண்ட ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் :-



1. S.Raghupathy, Asst.Secretary General, NFPE

2. Gopu Govindarajan, Organising Secretary, AIPEU P4 CHQ
3. G.P. Muthukrishnan, FNPO,Circle Secretary P3
4. Gunasekaran, FNPO,Circle Secretary P4
5. V..Venkataraman, Vice President , AIPEU P3 
6. K.Murali, Divisional Secretary, AIPEU P3, Chennai GPO
7. J.Purushothaman, Divisional Secretary, AIPEU P4 , Chennai GPO
8. A.Manivelan, Divisional Secretary, FNPO P3, Chennai GPO
9. A.Vaidyanathan, Divisional Secretary, FNPO,P4 Chennai GPO



இந்தப் பேச்சு வார்த்தையிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால், உடன்   NFPE /FNPO  அஞ்சல் மூன்று சங்கங்களின் சார்பாக உச்ச கட்ட கண்டன ஆர்ப்பாட்டமும் , தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினை தீர்க்கப்பட வில்லையானால் மறுநாள் முதல்  அஞ்சல் மூன்றும்  வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்ற முடிவும் எட்டப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன் அடிப் படையில்  சென்னை நகரம் முழுவதும் இந்த வேலை நிறுத்தம் விரிவு படுத்தப்படும் என்றும் நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டது. போராட்டம் மேலும்  தீவிரம் அடைந்தது . NFPE , FNPO ,BPEF ,SC /ST  FEDERATION  சங்கங்களின் ஊழியர்கள் உருக்கு போல ஒன்று திரண்டு போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. 


இதனால் வேறு வழியில்லாமல்  மாநில அஞ்சல் நிர்வாகம் இறங்கி வந்து, காலை 60 BEAT FOR  ALL  ARTICLES   மற்றும்  மதியம் 10 BEATS FOR SPEED POST என்றும் வழங்குவதாக  அறிவித்தது. மேலும் இது 15 நாட்களுக்கு பரீட்சார்த்த ரீதியில் இயங்கும் என்றும் .  மேலும்  BEAT  கள்  விரிவாக்கம் குறித்து அதன் பிறகு பேசி முடிவெடுக்கப்படும் என்றும்  இரு தரப்பாலும் ஒப்புக் கொள்ளப் பட்டது. மேலும் வேலை நிறுத்த நாட்களுக்கு NO  WORK -NO PAY என்ற அடிப்படையில் தீர்மானிக்கப் படும் என்று உறுதி அளிக்கப் பட்டது. இந்த அடிப்படையில் , உடன்  17.08.2013 அன்று  ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அன்றைய தபால்கள் பட்டுவாடா செய்யப் பட்டன.  


வீரம் செறிந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திய  CHENNAI GPO அஞ்சல் நான்கு தோழர்களுக்கும் , அதற்கு துணை நின்ற அஞ்சல் மூன்று தோழர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்.  

இந்த பேச்சு வார்த்தையில்  மாநில  அஞ்சல் நிர்வாகத்திற்கும்  போராடும் தோழர்களுக்கும் இடையே  ஒரு பாலமாக இருந்து , போராட்ட களத்திற்கே சென்று பேச்சு வார்த்தை நடத்திய PMG ,CCR  திரு. மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின்  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 

தல மட்டப் போராட்டங்கள் மூலம் பிரச்சினைகள் உடனுக்கு உடன் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்கிற நம் தொழிற் சங்க வரலாறு   CHENNAI GPO போராட்டத்தின் மூலம்  மீண்டும்  நிரூபிக்கப் பட்டுள்ளது.