Thursday, August 29, 2013

SPECIAL INTERVIEW WITH THE PMG, SR ON SOUTHERN REGION ISSUES ON 03.09.2013

                                              அன்புத் தோழர்களே ! வணக்கம் ! 

கடந்த 18.07.2013 அன்று மதுரையில் நமது NFPE  R 3 ,மற்றும் R 4 மாநிலச் செயலர்கள் பங்கு கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெற்றது உங்களுக்குத் தெரிந்ததே ! அதனை ஒட்டியும் நமது அஞ்சல் பகுதி பிரச்சனைகளை விவாதிப்பதற்காகவும்  NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழு கன்வீனர் என்ற முறையில்  கடந்த  25.07.2013 அன்று தென்மண்டல PMG அவர்களிடம் சிறப்பு நேர்காணல் வேண்டி நாம் கடிதம் அளித்திருந்தோம். அதன் நகல் கீழே பார்க்கவும். ஆனால்  அதற்கான பதில் அளிக்கப் படவில்லை. 

இதன்பிறகு கடந்த 10.08.2013 அன்று மதுரையில் நடைபெற்ற நமது அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின் படி , தென்மண்டல இயக்குனர் (பொறுப்பு) அவர்களின் சட்டத்தை மீறிய அடாவடி நடவடிக்கைகளை கண்டித்தும் தேங்கிக் கிடக்கும்  ஊழியர் பிரச்சினைகளை தீர்த்திட வேண்டியும்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பாக தென் மண்டல அளவில்  தொடர் போராட்டம் நடத்துவதாக நாம் முடிவெடுத்தோம்.  அதன் முதற் கட்டமாக  எதிர் வரும் 04.09.2013 அன்று , மண்டலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பட்டமும், அதே நேரத்தில் மாநிலத் தலைவர், மற்றும் மாநிலச் செயலர் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம்  மதுரை மண்டல அலுவலகம் முன்பாக நடத்தி  நம் கோரிக்கை மனுவை PMG, SR அவர்களிடம் நேரிடையாக அளிப்பது எனவும் , அதன் நகல் CPMG  அவர்களுக்கு உரிய உயர்மட்ட நடவடிக்கைள் வேண்டி அளிப்பது  எனவும் முடிவெடுத்தோம். 

இந்த முடிவினை அமல் படுத்திட வேண்டியும் , நமது சிறப்பு நேர்காணல் வேண்டிய கடிதம் உதாசீனப்படுத்தப் பட்டது குறித்தும் பதிவு செய்து , ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதியில்  மண்டல PMG அவர்களை தலைமையிடத்தில் இருக்க வேண்டி  ஒரு கடிதத்தினை  இணைப்புக் குழு சார்பாக கடந்த 24.08.2013 அன்று  அளித்தோம். இதன் விளைவாக  கடந்த 27.08.2013 தேதியிட்ட PMG  அவர்களின் கடிதம் 28.08.2013 அன்று மின்னஞ்சலில் நமக்கு அனுப்பப் பட்டது .  தொடர்ந்து APMG  (STAFF ) அவர்களும் , தொலைபேசியில் நம்மை அழைத்து ,  PMG சார்பாக இதனை உறுதி செய்வதாகவும்  எதிர்வரும் 03.09.2013 அன்று  நமது பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்திட  மதுரை வருமாறும்  நம்மிடம் அறிவித்தார். இந்த இரு கடிதங்களின் நகலும் கீழே  உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம். 

மேலும், இது அஞ்சல் மூன்று சார்பாக நடத்தப்படுவதாக ஏற்கனவே திட்டமிடப் பட்டிருந்தாலும்,  இந்த போராட்டத்தில்   RMS  மூன்றின் மாநிலச் செயலர் தோழர். சங்கரன் அவர்களும்,  RMS  நான்கின் மாநிலச் செயலர் தோழர் . ராசேந்திரன் அவர்களும் SBCO  மாநிலச் செயலர் அப்பன்ராஜ் அவர்களும், AIPEU  GDS NFPE  மாநிலச் செயலர் தோழர் தனராஜ் அவர்களும் தங்களை இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.  எனவே இந்தப் போராட்டக் களம் தற்போது விரிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட போராட்டத்திற்குள்  இது மேலும் விரிவுபடும் என்று தெரிகிறது. 

தற்போது எல்லாவித ஏற்பாடுகளையும் நாம் செய்து விட்ட காரணத்தினாலும், பல கிளைகளில் ஏற்கனவே நோட்டீஸ்  அடிக்கப்பட்டு வெளியிடப் பட்டுவிட்ட காரணத்தினாலும்   தோழமை சங்கங்களை இந்த குறுகிய காலத்தில் நம்முடைய போராட்ட வளையத்தினுள்  கொண்டு வர இயலாத சூழலில் நாம் இன்று உள்ளோம்.  நிச்சயம் அடுத்த கட்ட போராட்டத்திற்கு முன் கலந்துரையாடி  இந்தப் போராட்டத்தை பொது போராட்டமாக  விரிவு படுத்திட இயலும் ! அதற்கான முயற்சிகளில் மாநிலச் சங்கம்  திறந்த மனதுடன் செயல் படும்.!

தற்போது எதிர்வரும் 03.09.2013 அன்று மதியம் 03.00 மணிக்கு பேச்சு வார்த்தைக்கு  சிறப்பு நேர்காணல் அளித்திருப்பதால் , 04.09.2013 ஆர்ப்பாட்டம் நடைபெறாது என்று எந்த கோட்ட/ கிளைச் செயலரும் சுணக்கமாக இருந்திட வேண்டாம் என்று வேண்டுகிறோம் .

உடனே  மதுரை கோட்டத்தில் செய்தது போல நோட்டீஸ் அடித்து அதன் நகலை தென் மண்டல PMG மற்றும் CPMG க்கும்  மாநிலச் செயலருக்கும் அனுப்பிட வேண்டுகிறோம். நமது போராட்டம் என்பது , பிரச்சினைகள் தீரும் வரை ஓயாது  என்பதை  நினைவில் கொள்ளவும். பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை எனில்  அடுத்த கட்ட போராட்டம் 15 நாட்களில் நடத்தப்படும் என்று ஏற்கனவே முடிவு எடுத்துள்ளதை  உங்களுக்கு நினைவுறுத்துகிறோம்.  

எனவே 03.09.2013 அன்று MEMORANDUM  அளித்து பேச்சு வார்த்தை நடத்துவது என்பது இறுதியானது என்று எவரும் வரையறுக்க வேண்டாம்.  சிறப்பு நேர் காணல்  முடிந்தவுடன் அன்று மாலை மதுரையில்  இது குறித்து  கோட்ட/ கிளைச் செயலர்களுடன் விவாதிக்கப்படும். எனவே,  03.09.2013 மாலை கோட்ட/ கிளைச் செயலர்கள் மதுரைக்கு வருமாறு  அன்புடன் வேண்டுகிறோம்.

பரவட்டும் !  தீ பரவட்டும் ! போராட்டத் தீ பரவட்டும் ! 
அழியட்டும் ! ஆணவம் அக்கிரமம்  முற்றிலுமாக அழியட்டும் !    
மலரட்டும்  ! மலரட்டும் ! 
நீதியும் நேர்மையும் நிர்வாகத்தில் மலரட்டும் !