தேசிய கூட்டு ஆலோசனைக் குழு என்பது மத்திய அரசு ஊழியர்களின் உச்ச மட்ட அமைப்பு . இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சினைகளை நேரிடையாக எடுத்துச் சென்று பேசிட முடியும் . இந்த அமைப்பில் முதல் முதலாக நமது 15 அம்சக் கோரிக்கைகளில் 12 எடுக்கப் பட்டு ஊழியர் தரப்பு பிரச்சினையாக எதிர் வரும் கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்கப் பட்டுள்ளது. இதில் முக்கியமாக GDS ஊழியர்களின் ஊதிய விகிதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் என்பதும் அவர்களை இலாக்கா ஊழியர்கள் ஆக்கிட வேண்டும் என்பதும் அடங்கும் . இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். இது நாள் வரை ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர் உச்ச மட்ட அமைப்பில் GDS பிரச்சினைகள் எடுத்துச் செல்லப் பட்டதே இல்லை . தற்போது எடுக்கப் பட்டுள்ளது. இது நமது NFPE இயக்கத்தின் வெற்றியாகும்.
கீழே செய்தியை பார்க்கவும் :-
Agenda for next meeting of the JCM National Council has been finalized on 27.08.2013 in consultation with DOP&T Twelve demands raised by Confederation in the charter of demands are included. (including GDS employees demand) Next meeting of National Council JCM is expected by the end of October 2013.
The letter give by Com. Umraomal Purohit, Secretary, JCM (NC) and the 12 demands included in the agenda are given below:
M. Krishnan
Secretary General
Confederation