Monday, August 12, 2013

SOUTHERN REGION TU STUDY CAMP AND DIVL./BR. SECS. MEETING , A GRAND SUCCESS

தென் மண்டல தொழிற்சங்க பயிலரங்கு மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் மாபெரும் வெற்றி !
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
                    தென் மண்டல தொழிற்சங்க பயிலரங்கு

கடந்த 09.08.2013 அன்று மதுரை மேல மாசி வீதியில் அமைந்துள்ள ஜெய விலாஸ் கம்மா பவனம் என்ற அரங்கில்  தென் மண்டல தொழிற்சங்க பயிலரங்கும்  10.08.13 அன்று அதே இடத்தில்  தென் மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது. 

தொழிற் சங்கப் பயிலரங்கு நிகழ்ச்சிக்கு முன்னாள் மண்டலச் செயலர் தோழர். K . நாராயணன் அவர்கள் தலைமை வகித்து சிறப்பாக நடத்திய விதம்  பாராட்டுக் குரியது . மாநில அமைப்புச்  செயலர் தோழர். V . ஜோதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார் .

காலை சுமார் 11.00 மணியளவில் வகுப்புகள் துவங்கின.  "அஞ்சல் தொழிற் சங்க வரலாறும் இன்றைய தொழிற் சங்க கடமையும்" என்ற தலைப்பில்  மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்கள் சிறப்பானதொரு தொழிற் சங்க வரலாற்று நிகழ்வுகளை  உள்ளடக்கிய வகுப்பினை எடுத்தார். இன்றைய கால கட்டத்தில்  நமது பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதனையும் சிறப்பாக விளக்கினார். 

அடுத்து  " தகவல் அறியும் உரிமை சட்டமும்  CONTRIBUTORY  NEGLIGENCE  விதிகளும் " என்ற தலைப்பில் அஞ்சல் மூன்றின் முன்னாள் துணைப் பொதுச் செயலர் தோழர் S . சுந்தரமூர்த்தி அவர்கள் சிறப்பான விளக்கங்களுடனும் நடைமுறை உதாரணங்களுடனும்  டுத்த வகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு " அஞ்சல் துறையின் எதிர்காலமும் , எதிர் கொள்ள வேண்டிய சவால்களும் , நமது கடமையும் " என்ற தலைப்பின் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R .  அவர்கள் புதிய பிரச்சினைகளான CHANGE  MANAGEMENT , POST  BANK ,  I.T. MODERNIZATION PROJECT 2012,  NATIONAL POSTAL POLICY 2012, POSTAL DEVELOPMENT AUTHORITY  OF  INDIA அமைப்பு, CORE BANKING, RURAL ICT ,  தனியார் SOFTWARE COMPANY   களான INFOSYS , SIFY, TCS , RELIANCE , M/S SAI உள்ளிட்ட  கம்பெனிகளின் அஞ்சல் துறை மீதான படையெடுப்பு இதன் விளைவான தாக்கங்கள் ,அவற்றை நாம் எதிர் கொள்ள வேண்டிய விதம்  , நம் தொழிற் சங்கங்களின் கடமை குறித்து விரிவாக  விளக்கி தனது வகுப்பினை  அளித்தார் . இது வந்திருந்த அனைத்து தோழர்/ தோழியர்களையும் புதிய சிந்தனைக்கு அழைத்துச் சென்றது .

அடுத்து "ஊழியர் பாதுகாப்பு  விதிகள், நடத்தை விதிகள் ,  இலாக்கா நடைமுறைகள் , ஊழியர்கள் தங்களை தற்காத்து கொள்ளும்  முறைகள் " உள்ளிட்ட  பிரச்சினைகள் குறித்தும்  இலாக்கா நிலைமைகள் குறித்தும் விரிவாகவும் விளக்கமாகவும் தனக்கே உரிய சிறப்பான விதத்தில் நம்முடைய அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலரும் JCM (DC ) STAFF  SIDE  LEADER  உம் ஆகிய  தோழர் KVS  அவர்கள் அளித்த வகுப்பு அனைவராலும் பெரிதும் ஈர்க்கப்பட்டது.  தொடர்ந்து அவரே  ஒரு மணி நேரத்திற்கு  வந்திருந்த சார்பாளர் தோழர்களுடன் கலந்துரையாடியதுடன் அல்லாமல்  கேள்வி - பதில் விவாத அரங்கினையும் சிறப்பாக நடத்தினார்.  அனைத்து விதமான கேள்விகளுக்கும் இலாக்கா விதிகளுடன்  சிறப்பாக  பதிலினை அளித்தார்.  

கூடவே  வந்திருந்த DELEGATE  களுக்கு  STUDY  MATERIAL  ஆக  40 பக்கங்களுக்கு ஒரு சிறப்பான கை ஏடு  மாநிலச் சங்கத்தால்  அளிக்கப் பட்டது. இது மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததாக சார்பாளர்கள் பாராட்டினர். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் திண்டுக்கல் அஞ்சல் மூன்று  சார்பில் ஒரு SHOULDER BAG நினைவுப் பரிசாக வழங்கப் பட்டது. இறுதியில்,  நிகழ்ச்சியின் தன்மை குறித்து அறிய FEED BACK  படிவம் அனைவருக்கும் அளித்து  பதில் பெறப்பட்டது. பெரும்பகுதி தோழர்கள் இது போன்ற வகுப்புகள்  இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியம் என்றும் , இனி ஒவ்வொரு கோட்டத்திலும் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகுப்புகள் அவசியம் நடத்தப் பட வேண்டும் என்று வேண்டுகோள் FEED BACK  படிவத்தில்  வைத்திருந்தனர்.  

கிட்டத்தட்ட 84 DELEGATE  கலந்து கொண்டனர் . மதுரை கோட்டத்தில் இருந்து கலந்து கொண்டவர்களையும்  சேர்த்து 100 ஊழியர்களுக்கு மேல் வருகைப் பதிவு  சிறப்பினை  சேர்த்தது. கலந்து கொண்டவர்களில் 28 பேர்  2 லிருந்து 5 ஆண்டு சேவைக்குள்  உள்ள இளைஞர்கள் . 3 மகளிர் தோழியர்கள் கலந்து கொண்டனர்.  17 கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தின் முடிவில், அடுத்து  தென் மண்டலத்தில்  நெல்லையில் இளைஞர் பயிற்சி முகாம்  நடத்தப் படும் என்று  மாநிலச் செயலர் அறிவித்தார் . இதனை ஏற்று நடத்துவதாக அறிவித்ததுடன்  மாநில உதவிச் செயலர் தோழர். S .K . ஜேக்கப் ராஜ் அவர்கள் நன்றி கூறியும்   முடித்து வைத்தார். 

 கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம்

மறுநாள், 10.08.2013 காலை 10.00 மணி அளவில்  தென் மண்டல கோட்ட/கிளைச்  செயலர்கள் கூட்டம் , மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்கள் தலைமையில்   துவங்கியது. மாநில உதவிச் செயலர் தோழர் S .K . ஜேக்கப் ராஜ் அவர்கள் வரவேற்க, முன்னாள் துணைப் பொதுச்செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்கள்  துவக்கி வைத்து , தென் மண்டல பிரச்சினைகளை விளக்கியும் மண்டல இயக்குனரின் அடாவடிகளை விரிவாகவும் எடுத்துரைத்து உரை யாற்றினார். பின்னர் சம்மேளன செயல் தலைவர் தோழர். மனோகரன் அவர்கள் கூட்டத்தை வாழ்த்திப்  பேசினார். 

தொடர்ந்து  மாநில அமைப்புச் செயலர் தோழர் V .ஜோதி  தென் மண்டலப் பிரச்சினைகளை  சுருக்கமாக எடுத்துரைத்தார். அதன் பிறகு மாநிலச் செயலர் தோழர் J .R .அவர்கள் மாநில மாநாட்டில் எடுத்த முடிவு குறித்தும் , முதல் கூட்டம், இரண்டு மாதங்களில்  தென் மண்டலத்தில் நடத்துவது குறித்தும்கூட்டத்தின் நோக்கம்  குறித்தும் விரிவாக  எடுத்துரைத்து , கலந்து கொண்டுள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும்  அவரவர் பகுதிப் பிரச்சினைகளையும்  பொதுப் பிரச்சினைகளையும்  விரிவாக விளக்குமாறு   வேண்டுகோள் விடுத்தார். 

பின்னர்  தென் மண்டலத்தில் 17 கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்களது  பகுதிப் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.   இதில் பெரும்  பகுதியினர்  தென் மண்டல இயக்குனரின் அடாவடி நடவடிக்கைகளைப் பற்றியும் ,சட்ட விரோத செயல்பாடுகள்  குறித்தும், காட்டு தர்பார் நடத்துவது குறித்தும்  கோபத்துடன் விளக்கிப் பேசினார் . ஊழியர்களின்  சுழல் மாற்றல்  உத்திரவுகளில்,  மேல் முறையீடுகள் அனைத்தும்  அவர் தள்ளுபடி செய்த விதத்தை எடுத்துக் கூறினார் . அவர் மட்டும் 4 வருடம் திருச்சியிலும் , 4 வருடம் மதுரையிலும்  மேலும் 4 வருடம் கோவையிலும் தன்  சொந்த இடத்திற்கு அருகில்  இருந்து கொள்ள ஆசைப்படுவதும் , பெண் தோழியர்களுக்கும் , முதியோர்களுக்கும் கூட ஈவிரக்கம் இன்றி மனுக்களை தள்ளுபடி செய்வதும்  வாடிக்கையாக  உள்ளது என்றும்   கோபத்துடன் கூறினார் . 

மேலும்,  கீழ் அதிகாரிகள் வழங்கிய தண்டனைகள் அனைத்தும்  REVIEW என்ற பெயரில் SADIST  மனப்பான்மையுடன்  அதிகப் படுத்தப் பட்டுள்ளதாகவும் , மேல் முறையீடு என்பதே கேலிக்குரியதாக விட்டதாகவும் கூறினார் . 

ஊழியர்கள் எந்த வித சட்டத்திலும் இல்லாமல் , பண்ணையார் போல மண்டல அலுவலகத்திற்கு  தொலைபேசியில் வரவழைக்கப் படுவதும் , விசாரணை என்ற பெயரில்  காலை முதல் மாலை வரை காக்க வைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு , கன்னியாகுமரிக்கு மாற்றல் போடுவேன் என்று மிரட்டுவதும் , இங்கேயே தங்கு......நாளை விசாரிக்கிறேன் என்று கூறுவதும் ...  மத்திய அரசுத்துறையில் இடி அமீன்  ஆட்சி போல  காட்டு தர்பார் நடக்கிறது  என்றும்  கோபத்துடன் .தெரிவித்தனர். 

கீழ் அதிகாரிகள் அனைவரும் இரவு நேரத்தில் கைபேசியை எடுக்கவே பயப்படுகின்றனர். . ஏனெனில்  இரவு நேர கொச்சை வசனங்களை கேட்கவே பயமாக உள்ளது என்று அந்த அதிகாரிகள் கோட்டச் செயலர்களிடம் கூறிப் புலம்புவதாக  பேசிய  செயலர்கள் கூறினார்.  இதுபோல மதுரை வந்தால்  அடிக்கடி எங்கு தங்குகிறார் என்பது குறித்த விபரங்களும்  புகாராக எழுத்து  மூலம் தெரிவிப்பதாகவும்  CPMG /DG மூலம் மாநிலச் சங்கமும் , அகில இந்திய சங்கமும் உரிய உயர்மட்ட  விசாரணை  செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அதற்கான ஆவணங்களை அளிப்பதாகவும் கூறினார். 

இதன் மீது  இறுதியில் பேசிய  மாநிலச் செயலரும் , முன்னாள் அகில இந்திய பொதுச் செயலரும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமாக பேசினார் . ஒரு வாரத்தில் இந்த  பிரச்சினைகள் மீது MEMORANDUM  தயாரிக்கப் பட்டு , மண்டல மற்றும் மாநில உயர் அதிகாரிக்கு  அளிக்கப் படும்  என்றும் 15 நாட்களுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லையானால்  தொடர்  போராட்டங்கள் நடத்தப் படும் என்றும் தெரிவித்தனர். 

மேல் முறையீட்டு அதிகாரி ,  தண்டனை வழங்கும் அதிகாரியின் DISCIPLINARY  POWER  ஐ தானே எடுத்துக் கொண்டு நேரடி விசாரணை செய்வேன் என்பதும் , மதுரைக்கு உடன் தொலைபேசியில் அழைக்கப் படுவதும் சட்ட விரோதம் ஆகும் .அப்படி செய்தால் அவர் தானாகவே APPELLATE  அதிகாரி  என்ற இடத்தை இழக்கிறார் . அவர் அளிக்கும் APPEAL  மீதான உத்திரவு எதுவும்  சட்டப் படி செல்லாது .  இது குறித்து  பாதிக்கப் பட்ட நபர்களின் புகாருடன் மாநிலச் சங்கம்  சேர்ந்து  மத்திய தீர்ப்பாயத்தில்  வழக்கு தொடர  உள்ளது என்றும் தெரிவித்தனர் . 

மேலும்,  இவை குறித்து  பாதிக்க பட்ட அனைத்து ஊழியர்களிடமிருந்தும்  புகார்களை கோட்ட/ கிளைச் செயலர்கள் பெற்று மாநிலச் சங்கத்திடம் தற்போது அளித்துள்ளனர் . இது குறித்து உரிய உயர்மட்ட விசாரணை  நடத்திட  CPMG  அவர்களிடமும் , MEMBER (P ) அவர்களிடமும்  SECRETARY POSTS  அவர்களிடமும்  மாநிலச் சங்கம்  மற்றும் அகில இந்திய சங்கம் மூலம் அளிக்கப் பட உள்ளது என்றும் தெரிவித்தனர். 

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மண்டலத்தில் , மாநிலச் சங்கம் சார்பில்  இப்படி ஒரு சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்து, நடத்திக் கொடுத்த  மதுரை கோட்ட சங்கத்திற்கு, குறிப்பாக அதன் செயலர் தோழர்.முருகேசன்,  உதவிச் செயலர் தோழர். கிருஷ்ணமூர்த்தி, தலைவர் தோழர். தமிழ்செல்வன், முன்னாள் மண்டலச் செயலர் தோழர் நாராயணன்  மற்றும் இவர்களுடன் இறுதிவரை உடன் நின்று கூட்டத்தினை வெற்றியடைய  முழு உதவி புரிந்த தோழர். சுந்தரமூர்த்தி ஆகிய அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !

இது முடிவல்ல !  ஆரம்பம் ! தொடரும் நம் பேரியக்கம் ! தொடர்ந்து வரும்  ஊழியர் போராட்டம் ! 
ஒன்று படுவோம் ! வென்று முடிப்போம் !