Saturday, January 11, 2014

TN NFPE CO-ORDINATION COMMITTEE STRUGGLE PROGRAMME BEFORE R.O. MADURAI A GRAND SUCCESS !

அனைத்துத் தடைகளையும் உடைத்து எறிந்து வெற்றி பெற்ற போராட்டம்.மதுரை மண்டல அலுவலக வளாகத்தில் 

 தொடர் முழக்க ஆர்பாட்டம்.


Displaying News.jpg5.1.14 அன்று மதுரை மண்டல அளவில்   தமிழ் மாநில NFPE COORDINATION COMMITTEE சார்பாக நடைபெற்ற  கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைப் பட்டியிலிட்டு, அதனை வழங்கும் முகத்தான் , தொடர் முழக்கப் போராட்டம் 10.1.14 அன்று வெற்றிகரமாக நடத்தப் பட்டது.இந்தப் போராட்டத்தைக் கண்டு பயந்த மதுரை மண்டல நிர்வாகம்    காலை 9 மணிக்குள்ளாகவே, அனைத்து R.O.இல் பணி புரியும் ஊழியர்களையும் பணிக்கு வர ஆணையிட்டும், 9 மணிக்கு அலுவலக வெளிக் கதவை பூட்டு போட்டு பூட்டியும், பெரிய அளவில் போலீஸ் படையை வரவழைத்தும் பல தடைகளைப் போட்டது.  சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நடக்காது என தப்புக் கணக்குப் போட்டது.

தடைகளை மீறி உள்ளே போர்ப் பரணி இசைத்திட நமது படை காலை 10 மணியளவில் உள்ளே நுழைந்தது. காவல் துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய மாநிலச் சங்கங்களின் செயலர்கள்,வளாகதினுள்ளே போராட்டம் செய்திட வியூகம் அமைத்தனர். அலுவலக உள் கதவை மூடுதல், கையிலே BMM கூட்டத்திற்கு வரும் பட்டியலை MTS முதல் APMG வரை கையில் வைத்துக் கொண்டு, CHECK-OFF செய்தல், இந்திய-பாகிஸ்தான் எல்லை வாகா பார்டர் போல கெடுபிடி அமலாக்கல், காவல் துறை அதிகாரிகள் மூலமாக நமக்கு செய்தி பரிமாற்றம் செய்தல், தீவிர வாதக் கும்பலை எதிர் கொள்ளும் அளவிலே முஸ்தீபுகள் என நிர்வாகம் செய்த ஆர்ப்பாட்டத்திற்கு அளவே இல்லை. 

ஆயினும், காவல் துறை அதிகாரிகள் மூலமே பூட்டிய வெளிக் கதவைத் திறக்கச் செய்தோம்.  வாகா பார்டர் திறக்கப் பட்டதும், மூடியிருந்த உள் கதவை அதே காவல் துறை மூலம் PMG அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து, அனுமதி மறுக்கப்பட்டாலும் தார்ணா  நடத்தப்படும் என PMG-இடம் அறிவித்து விட்டு,வெளியே வந்தமாநிலச் செயலர்கள்  வெற்றி முழக்கங்களுடன் இயக்கம் துவக்கினர் .. தொடர் முழக்கப் போராட்டத்தில் பெண் தோழியர்கள் உட்பட சுமார் 500, எழுச்சி மிகு தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டு, தென் மண்டல நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பரித்த கோஷங்கள் விண்ணை முட்டின. திரள் கூட்டத்தினைக் கண்டு தென் மண்டலமே ஆடிப் போனது.

NFPE-COC அறைகூவல் படி விண்ணதிரும் முழக்கங்கள் வளாகத்தை குலுங்கச் செய்ய, தோழர் K. ராஜேந்திரன் , மாநிலத்  தலைவர் தலைமையில்,  NFPE  அஞ்சல் -RMS தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர்  தோழர் .J. இராமமூர்த்தி அவர்கள்   துவக்கி வைக்க, மாநிலச் செயலர்கள், K. ராஜேந்திரன் [R4], K.சங்கரன் [R3] அப்பன்ராஜ் [SBCO] K. பத்மநாபன் [DYCS P4],R .தனராஜ் [GDS] மற்றும் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் (மாநிலத் தலைவர் P 3) ஆகியோர் சிறப்புரை ஆற்ற கோலாகலமாக இயக்கம் பீடு நடை போட்டது.  மாநிலத் தலைவர்கள் G. கண்ணன் [P4], S. ராமராஜன் [GDS][மண்டல செயலர்கள் தியாகராஜபாண்டியன் [P3], செல்வராஜ் [R4] பாலமுருகன் [R3] ராஜசேகர் [GDS]  கேசவன் [SBCO] ஆகியோரும் மாநில சங்க நிர்வாகிகள் ஜேக்கப் ராஜ் [P3] பாண்டி துரைராஜ் [R3] ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்தினர். 

மதியம் 2.30 மணிக்கு BMM கூட்டத்தில் நாம் தயாரித்திருந்த கோரிக்கை மனுவில் கையெழுத்து இட்டிருந்த மாநிலச் செயலர்கள் உள்ளிட்டு 16 தோழர்கள் கலந்து கொண்டோம். நுழை வாயிலிலேயே மீண்டும் கையெழுத்துப் போடச் சொல்லி கெடுபிடி.  அதனை மறுத்து அனைத்து தோழர்களும் கான்பரன்ஸ் அறையிலே முகாம் இட்டோம். மகஜர் மீது பேச்சு வார்த்தை இல்லை எனச் சொல்லிய PMG அவர்களுடன் கறாராக வாதாடி BMM கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்வதாக எழுத்து பூர்வமாக கொடுத்து மகஜர் மீதான விவாதம் 21-ம் தேதி நடத்திட தேதி  நிர்ணயம் செய்து விட்டு வெளி நடப்பு செய்தோம். 

உள்ளே நுழையத் தடை உடைக்கப்பட்டது.  கூட்டம் போடத் தடை மீறப்பட்டது.  கெடுபிடிகளும், அதிகார அத்துமீறல்களும், ஆணவ செயல்பாடுகளும் தவிடு பொடியாகின.  இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்ற முழக்கம் மீண்டும் நிரூபிக்கப் பட்டது. இறுதி கட்ட பேச்சு வார்த்தையில்,

1. பொங்கல் அன்று துரித தபால் பட்டுவாடா உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
2.தூத்துக்குடி தோழியர் துர்கா தேவியின் மாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3. மேலூர் தெற்கு, மதுரை துணை அஞ்சலகம் மூடப்பெறும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
 மகிழ்ச்சியில் திரண்டிருந்த ஊழியர்கள் முழக்கங்கள் எழுப்பினர். 

ஆணவத்தின் உச்சம் சென்று ஆட்டம் போட்ட எவருமே வென்றதாக வரலாறில்லை என்ற வெற்றிக் கதையை மீண்டும் எழுதிய NFPE-COC க்கும் உணர்வுடன் ஊழியரைத் திரட்டிய கோட்ட/கிளை செயலர்களுக்கும் பெருமளவில் திரண்டு போராடிய தோழர்களுக்கும் வெற்றியினை உரித்தாக்குகிறோம். தென் மண்டலத்தின் அராஜகப் போக்கிற்கு எதிரான போராட்டம், தற்காலிகமாக முடிவு பெற்றது. இது முதற்கட்ட போராட்டமே ! எதிர்வரும் 21.01.2014 பேச்சு வார்த்தையில்  நம்முடைய பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப் படவில்லையானால் , அடுத்த கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பு உடன் வெளியிடப் படும் .

தொடர் முழக்கப் போராட்டதிற்கான எழுச்சி மிகு காட்சிகள் இதோ.....